“தமிழும் சரஸ்வதியும்” சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் – வெளியான ப்ரோமோ!

0
"தமிழும் சரஸ்வதியும்" சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் - வெளியான ப்ரோமோ!
“தமிழும் சரஸ்வதியும்” சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் – வெளியான ப்ரோமோ!

விஜய் டிவி தமிழும் சரஸ்வதியும் சீரியலில், அடுத்த வார எபிசோடுகளில் நடைபெறும் ட்விஸ்ட் குறித்த ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் திருமணம் பற்றி பேசுகின்றனர்.

தமிழும் சரஸ்வதியும்:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியலில், சந்திரகலா அவரது மகள் வசுந்தராவிற்கு திருமணம் செய்ய ஏற்பாடு செய்து வருகிறார். ஆனால் கோதையிடம் எந்த அறிவிப்பும் தெரிவிக்காமல் அவரே எல்லா முடிவையும் எடுத்து வருகிறார். இருந்தாலும் நம்ம வீட்டில் நடக்கும் முதல் திருமணம் அதனால் நம்ம பாக்ட்ரி தொழிலாளர்கள் என அனைவரையும் அழைக்க வேண்டும் என சொல்ல, உடனே எல்லாம் செய்து விடலாம் என சொல்கிறார்கள். மண்டபம் பெரிதாக இருக்க வேண்டும் என கோதை சொல்ல நான் பார்த்து வைத்திருக்கேன் என தமிழ் சொல்கிறார்.

விஜய் டிவி ‘பிக் பாஸ் 5’ இல் களமிறங்கும் சாம் விஷால், மாஸ்டர் பட நடிகர் – இறுதி போட்டியாளர்கள் விவரம்!

மண்டபத்தை அவர்களே முடிவு செய்து விட்டார்கள் என கார்த்திக் சொல்ல, உடனே கோதை கோபப்படுகிறார். திருமண ஏற்பாடுகள் நமக்கும் வசதியாக இருந்தால் தான் நான் சரி என்று சொல்வேன் என கோதை சொல்கிறார். உடனே தமிழ் சந்திரகலாவை பார்க்க வருகிறார். போனில் சொல்லிருக்கலாமே என சந்திரகலா சொல்ல, என் அம்மா உங்களை உடனே வீட்டிற்கு வர சொன்னார்கள் என தமிழ் சொல்கிறார். உடனே தமிழ் எங்களிடம் சொல்லாமல் கல்யாண மண்டபத்தை முடிவு செய்தது சரியா என கேட்கிறார்.

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் செய்த சாதனை – மூர்த்தி வெளியிட்ட இன்ஸ்டா பதிவு!!

இந்நிலையில் அடுத்த வார எபிசோட் குறித்த ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் சந்திரகலா கோதையை பார்க்க வருகிறார். அவர் மண்டபத்தில் ஒரு பக்கம் கோடீஸ்வரர் உக்காந்து சாப்பிட்டால் மறுபக்கம் எங்க தொழிலாளர் உக்காந்து சாப்பிட வேண்டும் அந்த அளவிற்கு வசதியாக இருக்க வேண்டும் என சொல்ல, உடனே ஆதி அப்போ நாங்க முடிவு செய்தது தவறு என்று சொல்றீங்களா என கேட்கிறார். உடனே சந்திரகலா ஆதியை அமைதியாக இருக்க சொல்கிறார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!