கதிரால் நடக்க முடியாமல் போன மூர்த்தி – சுக்குநூறாய் உடைந்த ‘பாண்டியன் ஸ்டார்ஸ்’ குடும்பம்!

0
கதிரால் நடக்க முடியாமல் போன மூர்த்தி - சுக்குநூறாய் உடைந்த 'பாண்டியன் ஸ்டார்ஸ்' குடும்பம்!
கதிரால் நடக்க முடியாமல் போன மூர்த்தி - சுக்குநூறாய் உடைந்த 'பாண்டியன் ஸ்டார்ஸ்' குடும்பம்!
கதிரால் நடக்க முடியாமல் போன மூர்த்தி – சுக்குநூறாய் உடைந்த ‘பாண்டியன் ஸ்டார்ஸ்’ குடும்பம்!

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் குடும்பங்கள் கொண்டாடும் சீரியலாக உள்ளது. கூட்டுக் குடும்பத்தின் ஒற்றுமையை சொல்லும் இந்த சீரியலுக்கு பெரும் வரவேற்பு உள்ளது. குடும்பத்தின் பலமே ஒற்றுமை தான் என வளரும் 4 அண்ணன் – தம்பிகளின் கதை தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்நிலையில் இந்த கூட்டுக் குடும்பத்தில் தற்போது பெரிய பிரளயமே ஏற்பட்டு உள்ளது.

எதிர்பார்ப்பில் ரசிகர்கள்:

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில், கடந்த சில வாரங்களாக கதிர்- முல்லை நோக்கியே கதை நகர்கிறது. இந்நிலையில் தனம் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு உறவினர்கள் அனைவரும் மூர்த்தி வீட்டிற்கு வருகை புரிந்தனர். அந்த சமயத்தில், முல்லைக்கு சிகிச்சை செய்ய பணம் கடன் கொடுத்தவர் ஒருவர் பணத்தை கேட்டு வீட்டின் முன் வந்து சத்தம் போட்டு விட்டு போவதால் வீட்டில் பிரச்சனை ஆரம்பித்தது. அப்போது மீனா அந்த கடன் பணத்தை கொடுக்க, அவரது அப்பா வந்து அவள் ஏன் பணம் கொடுக்க வேண்டும் என வாக்குவாதம் பெரிய பிரச்சனையாகி விடுகிறது.

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” அஞ்சலி கண்மணிக்கு இன்று பிறந்தநாள் – வாழ்த்து சொன்ன வெண்பா!

அந்த நிலையில் ‘முல்லைக்கு செலவு செய்த பணத்தை நான் கொடுத்து விடுகிறேன், அதற்கு நேரம் கொடுங்கள், நாங்கள் போய்விடுகிறோம்’ என கூறி வீட்டை விட்டு கதிர், முல்லை கிளம்புகிறார்கள். மூர்த்தி, தனம் உள்ளிட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பமே கதிர்-முல்லை இருவரையும் தடுத்து நிறுத்தினாலும், அவர்கள் இவர்களது பேச்சை கேட்கவில்லை. ‘வீட்டை விட்டு வெளியேறினால் மறுபடியும் இந்த வீட்டிற்குள்ளே வரக்கூடாது’ என மூர்த்தி சொன்னாலும் கதிர் அதைக் கேட்காமல் முல்லையை அழைத்துக் கொண்டு கிளம்புகிறார்.

Exams Daily Mobile App Download

பிறகு வீட்டில் இருக்கும் தனம் உள்ளிட்ட அனைவரும் கதிர்-முல்லை வீட்டை விட்டு வெளியேறியதால் சோகத்தில் ஆழ்ந்து விட்டனர். அப்போது மூர்த்தி படுத்துக்கொண்டே அழுகும் போது, திடீரென்று அவருக்கு நெஞ்சுவலி ஏற்படுகிறது. இதன் பிறகு மூர்த்தியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை மேற்கொள்ளும்போது மூர்த்திக்கு பக்கவாதம் ஏற்பட்டுவிடுமோ? என்ற நோக்கில் கதை நகருமா என எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர். மேலும் கதிர், முல்லை மருத்துவ செலவிற்காக வாங்கிய கடன் தொகையை அடைக்க வெளியூருக்கு வேலைக்கு செல்லவும் வாய்ப்பிருக்கிறது. அடுத்து என்ன நடக்கும் என்பதை இனி வரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here