விளம்பர படத்தில் நடிக்கும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” தனம், மூர்த்தி & கண்ணன் – ரசிகர்கள் உற்சாகம்!

0
விளம்பர படத்தில் நடிக்கும்
விளம்பர படத்தில் நடிக்கும் "பாண்டியன் ஸ்டோர்ஸ்" தனம், மூர்த்தி & கண்ணன் - ரசிகர்கள் உற்சாகம்!
விளம்பர படத்தில் நடிக்கும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” தனம், மூர்த்தி & கண்ணன் – ரசிகர்கள் உற்சாகம்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் பிரமாண்டமாக கடை திறப்பு விழா நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கண்ணன், தனம், மூர்த்தி இணைந்து நடிக்கும் விளம்பரம் படம் குறித்த புகைப்படத்தை கண்ணன் கதாபாத்திரத்தில் நடிக்கும் சரவண விக்ரம் வெளியிட்டுள்ளார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

டாப் சீரியல் வரிசையில் இருக்கும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் சாதாரண குடும்பத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளை மையப்படுத்தியே கதை சென்று கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் அண்ணன் தம்பிகள் நான்கு பேரும் சேர்ந்து சொந்தமாக கடை திறக்க வேண்டும் என நினைத்து குடும்ப பெண்களின் நகைகளை வைத்து கடன் வாங்காமல் கடை கட்ட தொடங்குகின்றனர். முழு உழைப்பையும் அதில் போட்டு கடை கட்ட, அதை திறக்க பல தடைகள் வருகிறது.

விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ அருணுடன் இணைந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை – வைரல் புகைப்படம்!

ஆனால் குடும்பமே சேர்ந்து ஒற்றுமையாக இருந்து அந்த கடையை திறக்கின்றனர். பல சொந்தங்கள் வர கடை திறப்பு விழா பல அலங்காரங்களுடன் நடைபெறுகிறது. குடும்பமே தங்களது கனவை சாதித்த சந்தோஷத்தில் இருக்கின்றனர். தம்பிகள் தான் என்னுடைய இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் என மூர்த்தி பெருமையாக சொல்ல, அனைத்து குடும்பமும் சந்தோசமாக இருக்கின்றனர். ஆனால் மீனாவின் அப்பாவிற்கு மட்டும் அது பிடிக்காமல் இருக்கிறது.

கோபி மீது முழு நம்பிக்கை வைத்துள்ள பாக்கியா, விவாகரத்தை நினைத்து சந்தோசப்படும் ராதிகா – இன்றைய எபிசோட்!

அவர் மாப்பிள்ளை இப்படி இருந்தால் நம்ம கடையை பார்க்கமாட்டார் என மீனாவின் அப்பா நினைக்கிறார். இதனால் சீரியலில் அவர் தான் நெகட்டிவ் ரோலாக இருக்கப்போகிறார் என எதிர்பார்ப்படுகிறது. இந்நிலையில் தனமாக நடிக்கும் சுஜிதா, மூர்த்தியாக நடிக்கும் ஸ்டாலின், கண்ணனாக நடிக்கும் சரவண விக்ரம் இணைந்து ஒரு விளம்பரப்படத்தில் நடிக்க இருக்கின்றனர். அது குறித்த புகைப்படத்தை சரவண விக்ரம் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!