கோபி மீது முழு நம்பிக்கை வைத்துள்ள பாக்கியா, விவாகரத்தை நினைத்து சந்தோசப்படும் ராதிகா – இன்றைய எபிசோட்!

0
கோபி மீது முழு நம்பிக்கை வைத்துள்ள பாக்கியா, விவாகரத்தை நினைத்து சந்தோசப்படும் ராதிகா - இன்றைய எபிசோட்!
கோபி மீது முழு நம்பிக்கை வைத்துள்ள பாக்கியா, விவாகரத்தை நினைத்து சந்தோசப்படும் ராதிகா - இன்றைய எபிசோட்!
கோபி மீது முழு நம்பிக்கை வைத்துள்ள பாக்கியா, விவாகரத்தை நினைத்து சந்தோசப்படும் ராதிகா – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் பாக்கியா விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து போட கோபி மீது எவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறார் என்பதை பார்த்து கோபி வருத்தப்படுகிறார்.

பாக்கியலட்சுமி:

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், பாக்கியா விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து போட கோபி இதில் என்ன இருக்கு என படிக்க மாட்டியா என்று கேட்கிறார். அப்போது பாக்கியா நீங்க என்ன செய்தாலும் என் நல்லதுக்கு தான் செய்வீர்கள் என சொல்ல, அலுவலகத்தில் சில பிரச்சனை அதனால் தான் டாகுமெண்ட் எல்லாத்தையும் உன் பெயரில் மாற்றுகிறேன் என சொல்கிறார். பின் கோபி பாக்கியா தன் மீது வைத்துள்ள நம்பிக்கையை நினைத்து கோபி குற்ற உணர்ச்சியில் இருக்கிறார்.

மறுபக்கம் பாக்கியா நிறைய வேலைகளை செல்வி மற்றும் ஜெனியிடம் சொல்கிறார். அப்போது எழில் வர பணம் பற்றவில்லை என பாக்கியா பேசிக் கொண்டிருக்கிறார். பின் சார் இப்போதும் வழக்கம் போல தான் பணம் கொடுப்பதாக எழிலிடம் செல்வி சொல்ல, பணம் எதுவும் தேவைப்பட்டால் என்னிடம் சொல்லு என எழில் சொல்கிறார். பணத்திற்காக நிறைய ஆர்டர் வாங்கி செய்து கொண்டிருக்கிறோம் என சொல்கிறார். மறுபக்கம் ராதிகா கோபி வக்கீலை பார்க்க செல்கிறார். நீங்க டைவர்ஸ் பேப்பரில் சுலபமாக கையெழுத்து வாங்கிட்டிங்க, இந்த வயதில் யாரும் விவாகரத்து வாங்கமாட்டார்கள் என சொல்கிறார்.

கயல் பாண்டியன் கையால் திறக்கப்பட்ட “பாண்டியன் சூப்பர் ஸ்டோர்ஸ்”, மகிழ்ச்சி வெள்ளத்தில் குடும்பம் – இன்றைய எபிசோட்!

அடுத்து என்ன நடக்கும் என கோபி கேட்க, கோர்ட்டிற்கு நீங்க இரண்டு முறை வர வேண்டும் என வக்கீல் சொல்கிறார். அவ்வளவு தான் சுலபமாக விவாகரத்து வாங்கிறலாம் என வக்கீல் சொல்ல, ராதிகா கோபி விவாகரத்து நினைத்து சந்தோசப்படுகிறார். உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும், உங்க குடும்பம் இருக்கிறது அதனால் என்னால் சுலபமாக பழகவில்லை. ஆனால் இப்போது எல்லாம் சரியாகிவிட்டது என ராதிகா சொல்கிறார். இன்னும் 6 மாதம் தான் என சொல்ல ராதிகா என் அம்மா சொன்னது தான் சரியாக வந்தது என சொல்கிறார்.

உன்ன மாதிரி ஒருத்திகாக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என கோபி சொல்கிறார். என் மனைவிக்கு தான் நான் தேவையில்லையே அதனால் தான் விவாகரத்து கொடுத்துவிட்டதாக கோபி சொல்கிறார். பின் பாக்கியா எல்லா வேலைகளையும் செய்ய, செல்வியிடம் பாக்கியா கையெழுத்து வாங்கியது பற்றி சொல்கிறார். அது என்ன பேப்பர் என செல்வி கேட்க, அது தெரியவில்லை ஆனால் அதில் நான் சரியாக கையெழுத்து போடவில்லை அதனால் தான் இப்போது போட்டு பார்க்கிறேன் என சொல்கிறார்.

பிறந்தநாள் விழாவிற்கு பாரதி & வெண்பாவை அழைத்த கண்ணம்மா, ரகசியம் பற்றி குழப்பத்தில் சௌந்தர்யா – இன்றைய எபிசோட்!

உன் மாமனார் தான் சொத்தை உன் பெயரில் எழுதி கொடுத்தாரே அதை சார் மீண்டும் மாற்றி எழுதி வாங்கினால் என்ன செய்வாய் இப்படி என்ன என தெரியாமல் கையெழுத்து போடலாமா என கேட்கிறார். அவர் என்னை அவருடைய ஆபிசில் பார்ட்னர் ஆக்க போறாராம். அதுனால தான் கையெழுத்து வாங்கியதாக சொல்லி பாக்கியா சந்தோசப்படுகிறார். அவர் உன்னிடம் சொல்லி ஏமாற்ற போகிறார் என சொல்ல, அவர் அப்படி எல்லாம் ஏமாற்ற மாட்டார் என பாக்கியா சொல்கிறார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here