முடிவை நோக்கி சென்று கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் – விரைவில் சீசன் 2 அறிமுகம்!

0
முடிவை நோக்கி சென்று கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் - விரைவில் சீசன் 2 அறிமுகம்!
முடிவை நோக்கி சென்று கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் - விரைவில் சீசன் 2 அறிமுகம்!
முடிவை நோக்கி சென்று கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் – விரைவில் சீசன் 2 அறிமுகம்!

முல்லைக்கு குழந்தை பிறக்குமா பிறக்காதா என பாண்டியன் ஸ்டோர் தொடர் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் வேளையில் தற்போது ஒரு அதிர்ச்சி கலந்த செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது பாண்டியன் ஸ்டோர் விரைவில் முடிவடைய போவதாகவும் அடுத்து சீசன் 2 தொடங்கப் போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் அனைத்து மக்களின் மத்தியில் அதிகமாக பிரபலமாகி வருகிறது. அந்த வகையில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர் தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதாவது முல்லைக்கு குழந்தை பிறக்குமா பிறக்காதா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். முல்லையால் இயற்கையாக கருவுற முடியாது என மருத்துவர் கூறிவிட்டார். இதனைத் தொடர்ந்து செயற்கை முறையில் வேண்டுமானால் குழந்தை பெற்றுக்கொள்ளலாம் எனவும் அவர் அறிவுரை கூறியுள்ளார்.

ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன கண்ணம்மாவின் கணவர் பாரதி – ரசிகர்கள் ஷாக்!

ஆனால் செயற்கை முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள அதிகமாக செலவாகும் என்பதால் என்ன செய்யலாம் என குடும்பத்தினர் அனைவரும் யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில் மூர்த்தி தற்போது வீடு கட்டும் பிளானை தற்காலிகமாக நிறுத்தி வைக்கலாம் என கூறிவிட்டார். குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் இது அதிர்ச்சியான செய்தியாக இருந்தாலும் அனைவருமே ஒப்புக்கொண்டனர். ஆனால் மீனாவிற்கு மட்டும் வீடு கட்டும் பிளானை நிறுத்தியது துளிகூட விருப்பம் இல்லை. இதனால் ஜீவாவிடம் சொல்லி அனைவருக்கும் சொந்தமான இந்த வீடு கட்டும் பிளானை நாம் ஏன் நிறுத்த வேண்டும் என ஏற்றி விடுகிறார்.

ஜீவாவும் மீனாவின் பேச்சை கேட்டு மூர்த்தியிடம் சண்டை போடுகிறார். இதற்குப் பிறகும் கூட செயற்கை முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள சிகிச்சை எடுத்துக் கொள்வாரா என யோசித்துக் கொண்டிருந்த வேளையில் தற்போது ஒரு அதிர்ச்சி கலந்த செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் விரைவில் முடிவடைய போவதாகவும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் சீசன் 2 விரைவில் ஒளிபரப்பப் போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சீசன் 2வில் முல்லைக்கு குழந்தை பிறக்காத காரணத்தினால் கதிருக்கு குடும்பத்தினர்கள் வேறு திருமணம் செய்து வைப்பது போன்ற காட்சிகள் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here