‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தனம் சுஜிதா தனது மகன்களுடன் வெளியிட்ட வீடியோ – ரசிகர்கள் உற்சாகம்!

0
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தனம் சுஜிதா தனது மகன்களுடன் வெளியிட்ட வீடியோ - ரசிகர்கள் உற்சாகம்!
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தனம் சுஜிதா தனது மகன்களுடன் வெளியிட்ட வீடியோ - ரசிகர்கள் உற்சாகம்!
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தனம் சுஜிதா தனது மகன்களுடன் வெளியிட்ட வீடியோ – ரசிகர்கள் உற்சாகம்!

தமிழ் சின்னத்திரை சீரியல்களில் நடிக்கும் நடிகைகளுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ள நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனம் கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை சுஜிதா தனது மகன்களுடன் வெளியிட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை சுஜிதா:

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின் பல சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சுஜிதா. தற்போது அவர் விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து வருகிறார். அதில் மூத்த மருமகளாக குடும்பத்தை பொறுப்பான முறையில் வழிநடத்தும் அண்ணியாக அவர் நடித்து வருகிறார். அவர் தெலுங்கில் வத்தினம்மா என்ற சீரியலிலும் நடித்து வருகிறார். இவர் இதற்கு முன்னதாக பல சீரியல்களில் நடித்து வந்தாலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தான் நல்ல புகழை கொடுத்தது.

“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் களமிறங்கிய புது முல்லை – ரசிகர்கள் ஷாக்!

இந்நிலையில் அவர் சீரியல் தவிர்த்து தனியாக யூடுப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் சமூக வலைதளங்களிலும் ஆக்டீவாக இருக்கும் சுஜிதா தனுஷ் அவ்வப்போது படப்பிடிப்பு தளத்தில் இருந்து வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தனது யூடுப் சேனலில் இல்லத்தரசிகளுக்கு தேவையான பல வீடியோக்களை பதிவிடும் சுஜிதா, இன்ஸ்டா பக்கத்திலும் பல போட்டோஷூட் புகைப்படங்களையும், ரீல்ஸ் வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார்.

விஜய் டிவி “ராஜா ராணி 2” சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் – சந்தியாவிற்கு பரிசு கொடுத்த சரவணன்!

இரண்டு மகன்களுக்கு தாயான நடிகை சுஜிதா தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது குழந்தைகளுடன் நடனமாடும் வீடியோ ஒன்றை பதிவிட்டு இருக்கிறார். அதில் மை ரவுடிஸ் வி ஆர் த்ரி என்று பதிவிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒரு பக்கம் சீரியல் படப்பிடிப்பு என சுஜிதா பிசியாக இருந்தாலும் தனது குடும்பத்தை கவனிப்பதில் அவர் தவறியதில்லை என்பதால் அவருக்கு ஏகப்பட்ட லைக்ஸ் குவிந்து வருகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!