ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” தனம் – ரசிகர்கள் உற்சாகம்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், மூத்த அண்ணியாக மிக பொறுப்பான தனம் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நடிகை சுஜிதா. அவர் ஏஞ்சல் போல உடை அணிந்து எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கூட்டு குடும்பத்தின் ஒற்றுமையை உணர்த்தும் கதையை மையமாக கொண்டுள்ளது. இந்த சீரியல் TRPயில் போட்டி போடும் சீரியல்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்டாலின், குமரன், வெங்கட், சுஜிதா, காவ்யா, ஹேமா, சரவண விக்ரம், சாய் காயத்ரி ஆகியோர் நடித்து வருகின்றனர். மூத்த அண்ணனாக மூர்த்தி கதாபாத்திரத்தில் ஸ்டாலின் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக தனம் கதாபாத்திரத்தில் சுஜிதா நடிக்கிறார்.
குடும்பத்தின் ஒற்றுமைக்காக பாடுபடும் அண்ணியாக சுஜிதா நடித்திருக்கிறார். இவர் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானாலும் சினிமாவை விட சீரியல்களில் நடிப்பதில் தான் ஆர்வம் காட்டி இருக்கிறார். இவர் வாலி படத்தில் அஜித்தின் தங்கையாக நடித்திருக்கிறார். அவர் தெலுங்கிலும் வத்தினம்மா என்ற சீரியலில் நடித்து வருகிறார். அந்த சீரியலும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் சுஜிதா பல புகைப்படங்களையும், ரீல்ஸ் வீடியோக்களையும் இன்ஸ்டா பக்கத்தில் பதிவிடுவார்.
விஜய் டிவி ‘பிக் பாஸ்’ வீட்டின் இந்த வார எவிக்சன் அபிஷேக் தான் – அதிர்ச்சியில் ரசிகர்கள்!
எப்போதும் சேலையில் குடும்ப பெண்ணாக மட்டுமே இருக்கும் அவர் தற்போது தேவதை போல உடை அணிந்து போட்டோஷூட் ஒன்றை நடத்தி இருக்கிறார். மாடல் உடையில் அவரை பார்த்த ரசிகர்கள் ஆச்சர்யத்தில் இருக்கின்றனர். மேலும் லைக்குகளை குவித்து வருகின்றனர். குடும்ப பெண் முதல் மாடலாக என அனைத்தும் சுஜிதாவிற்கு பொருத்தமாக இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.