ஷூட்டிங்க் ஸ்பாட்டில் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” ஐஸ்வர்யா செய்த காரியம் – கடுப்பான இயக்குனர்!

0
ஷூட்டிங்க் ஸ்பாட்டில்
ஷூட்டிங்க் ஸ்பாட்டில் "பாண்டியன் ஸ்டோர்ஸ்" ஐஸ்வர்யா செய்த காரியம் - கடுப்பான இயக்குனர்!
ஷூட்டிங்க் ஸ்பாட்டில் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” ஐஸ்வர்யா செய்த காரியம் – கடுப்பான இயக்குனர்!

விஜய் டிவியில் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த சீரியல் கதாபாத்திரங்களுக்கு தனி ரசிகர் கூட்டமே இருக்கின்றனர். இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி சீரியல் கதாபாத்திரங்கள் இணைந்து மகா சங்கமம் நடைபெற்று வருகிறது. அதில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நட்சத்திரங்கள் செய்த லூட்டிகள் குறித்த வீடியோ வெளியாகி இருக்கிறது.

சீரியல் நட்சத்திரங்கள்:

சின்னத்திரை சீரியல்கள் அனைத்திற்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். அந்த வகையில் ஏராளமான சீரியல்கள் காலை முதல் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த சீரியல்களில் மக்களின் மனம் கவர்ந்த ஒரு சில சீரியல் நட்சத்திரங்களுக்கு ரசிகர் மன்றம் வைக்கும் அளவிற்கு ரசிகர், ரசிகைகள் இருக்கின்றனர். விஜய் டிவியில் டாப் மூன்று இடத்தை பாண்டியன் ஸ்டோர்ஸ், பாரதி கண்ணம்மா, பாக்கியலட்சுமி சீரியல்கள் பிடித்துள்ளன.

கண்ணம்மாவை பழி வாங்க வெண்பா உடன் சேர்ந்த கணேஷ் – “பாரதி கண்ணம்மா” சீரியலில் அடுத்த எபிசோட்!

அதில் பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி சீரியல்களை கடந்த ஆண்டு 2 முறை ஒன்றிணைத்து 1 மணி நேர ஸ்பெசல் எபிசோடாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த வாரம் மகா சங்கமம் ஒளிபரப்பாகி வருகிறது. அதில் கதாபாத்திரங்களை ஒன்றிணைப்பது மட்டுமல்லாமல் உறவு முறை வைத்து அழைக்கப்பட்டு கதை கொண்டு செல்லப்படுகிறது. சில முக்கிய திருப்பங்கள் மகா சங்கமத்தில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exams Daily Mobile App Download

இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்து வரும் சாய் காயத்ரி தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சென்னையில் பெய்து வரும் கோடை மழையில் இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் செய்து மீனாவிற்கு கொடுத்து விட்டு தானும் சாப்பிட்டு உள்ளார். அந்த வீடியோவில் பீன்ஸ், கேரட் உள்ளிட்ட காய்கறிகளை வெட்டி அடுப்பில் உள்ள பாத்திரத்தில் போட்டு நூடுல்ஸ் செய்கிறார். சரியாக சாப்பிடும் நேரத்தில் மீனா வர அவருக்கும் கொஞ்சம் கொடுக்கிறார். படப்பிடிப்பு தளத்தின் இடையே எடுத்த இந்த வீடியோ தற்போது ட்ரெண்டாகி இருக்கிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!