‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் புதிதாக களமிறங்கும் நடிகர் – வைரலாகும் பதிவு!

0
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் புதிதாக களமிறங்கும் நடிகர் - வைரலாகும் பதிவு!
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் புதிதாக களமிறங்கும் நடிகர் - வைரலாகும் பதிவு!
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் புதிதாக களமிறங்கும் நடிகர் – வைரலாகும் பதிவு!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் குமரேசன் மாமா கதாபாத்திரத்தில் நெல்லை சிவா நடித்து வந்தார். ஆனால், நெல்லை சிவா மறைந்த காரணத்தினால் இவருக்கு பதிலாக தேனி முருகன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லையும் கதிரும் மீண்டும் குடும்பத்துடன் இணைவார்களா என சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. எப்படி கதிர் தனி ஆளாக வேலை செய்து 5 லட்ச ரூபாய் கடனை அடைக்க போகிறார் என ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்து கொண்டிருக்கின்றனர். இதற்கு இடையே முல்லையும் கதிருக்கு ஆதரவாக இனி வேலைக்கு செல்வாரா எனவும் ரசிகர்கள் மனதில் பல கேள்விகள் ஓடிக் கொண்டிருக்கிறது.

Exams Daily Mobile App Download

தற்போது மூர்த்தி நெஞ்சுவலி வந்து வீட்டில் ஒய்வெடுத்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில், சூப்பர் மார்க்கெட்டை கவனித்துக்கொள்ள ஜீவா மட்டும் தான் இருக்கிறார் என்பதால் தனமும் சூப்பர் மார்க்கெட்டுக்கு சென்றுள்ளார். மேலும், ஏற்கனவே பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் குமரேசன் மாமா கதாபாத்திரத்தில் நெல்லை சிவா நடித்து வந்தார். சீரியலுக்கு வருவதற்கு முன்பே நெல்லை சிவா பல திரைப்படங்களில் நகைச்சுவை நாயகனாக நடித்திருக்கிறார்.

பாரதியும், கண்ணம்மாவும் ஜானகி அம்மாவுக்கு செய்து கொடுக்கும் சத்தியம் – ப்ரோமோ ரிலீஸ்!

அதாவது, வடிவேலுவின் கிணற்றை காணவில்லை காமெடியில் இருந்து பல காமெடி சீன்களில் அசத்தியிருக்கிறார். இவர் கடந்த 2021 ஆம் ஆண்டில் மாரடைப்பின் காரணமாக மரணமடைந்தார். இதற்கு பிறகு பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலிலும் நெல்லை சிவாவின் கதாபாத்திரம் காண்பிக்கப்படவில்லை. ஆனால், தற்போது குமரேசன் மாமா கதாபாத்திரம் சீரியலில் முக்கியமாக காண்பிக்க வேண்டி இருப்பதால் நெல்லை சிவாவிற்கு பதிலாக தேனி முருகன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!