‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கதிர் நிஜ மனைவியுடன் வெளியிட்ட போட்டோ – ரசிகர்கள் வாழ்த்து!

0
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' கதிர் நிஜ மனைவியுடன் வெளியிட்ட போட்டோ - ரசிகர்கள் வாழ்த்து!
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' கதிர் நிஜ மனைவியுடன் வெளியிட்ட போட்டோ - ரசிகர்கள் வாழ்த்து!
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கதிர் நிஜ மனைவியுடன் வெளியிட்ட போட்டோ – ரசிகர்கள் வாழ்த்து!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கதிர் கதாபாத்திரத்தில் நடித்து வரும் குமரன் தங்க ராஜன் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ள புகைப்படம் ஒன்று தற்போது வைரலாக பதிவாகி வருகிறது. இதனால் குமரனின் ரசிகர்கள் தற்போது மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிர்:

விஜய் டிவியின் சீரியல்களில் நடிக்கும் நடிகர், நடிகைகள் அனைவருக்குமே அதிக ரசிகர்கள் இருக்கின்றனர். அதில், முக்கியமாக பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிர் முல்லை ஜோடிக்கு அதிக அளவில் ரசிகர்கள் உள்ளனர். இந்த சீரியலின் மற்றொரு புகழ் பெற்ற ஜோடியான ஜீவா மீனா ஜோடி எப்போதும் சண்டையிட்டுக் கொள்வதால் அதிக ரசிகர்களை பெற்றனர். ஆனால் கதிர் முல்லை ஜோடி மிகவும் அமைதியாக தயங்கி தயங்கி பேசிக் கொள்வதிலேயே அதிக வெற்றி அடைந்தனர்.

விஜய் டிவி பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் பாவ்னி? ரசிகர்கள் ஷாக்!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலமாக தான் குமரன் மக்கள் மத்தியில் நல்ல பரிட்சயமானார். அதற்கு முன்னதாக விஜய் டிவியின் ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியில் குழு நடன கலைஞராக குமரன் கலந்து கொண்டார். பின்னர், அதே நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் முன்னேற்றம் அடைந்தார். நடனத்தின் மீது அதிக ஆர்வம் கொண்ட குமரன் வெள்ளித்திரையில் நடிக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு உள்ளார். மேலும், பல குறும்படங்களிலும் நடித்துள்ளார். இவர் ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது சக போட்டியாளர் நடிகை சுஹாசினி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

“பாரதி கண்ணம்மா” சீரியலில் ரீஎன்ட்ரி கொடுத்த வில்லி வெண்பா – ரசிகர்கள் உற்சாகம்!

இந்த ஜோடியினர் விஜய் டிவியின் மிஸ்டர் அண்ட் மிஸஸ் நிகழ்ச்சில் கலந்து கொண்டு அதிகம் பேசப்பட்டனர். மிகவும் அமைதியான சுபாவம் கொண்ட குமரனின் மனைவி சுஹாசினி கலகலப்பாக பேசக்கூடியவர். இந்த நடன ஜோடியின் நடனத்திற்கு பல ரசிகர்களும் உள்ளனர். தற்போது குமரன் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது மனைவி சுஹாசினியுடன் ஜோடியாக எடுத்துக் கொண்ட கேஷுவல் போட்டோ ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த பதிவிற்கு ரசிகர்கள் பலரும் லைக்குகளை தெரிவித்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!