“பாரதி கண்ணம்மா” சீரியலில் ரீஎன்ட்ரி கொடுத்த வில்லி வெண்பா – ரசிகர்கள் உற்சாகம்!

0
"பாரதி கண்ணம்மா" சீரியலில் ரீஎன்ட்ரி கொடுத்த வில்லி வெண்பா - ரசிகர்கள் உற்சாகம்!
“பாரதி கண்ணம்மா” சீரியலில் ரீஎன்ட்ரி கொடுத்த வில்லி வெண்பா – ரசிகர்கள் உற்சாகம்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், கதையின் ஆணி வேரான வில்லி வெண்பா தற்போது ரீஎன்ட்ரி கொடுத்திருக்கிறார். இது குறித்த புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

நடிகை வெண்பா:

பாரதி கண்ணம்மா சீரியல் தமிழ் சின்னத்திரையில் டாப் சீரியல்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரமான பாரதி மற்றும் கண்ணம்மா 8 ஆண்டுகளாக பிரிந்து இருக்கின்றனர். இந்நிலையில் கண்ணம்மாவிற்கு ஹேமா தான் தன்னுடைய குழந்தை என்ற உண்மை தெரிய வருகிறது. அதனால் அவர் ஹேமா மீது பாசமாக இருக்கிறார். இதை பார்த்த பாரதி பிடிக்காமல் கண்ணம்மாவை விவாகரத்து செய்ய முடிவு செய்கிறார். மேலும் கருக்கலைப்பு விஷயத்தால் வில்லி வெண்பா ஜெயிலில் இருக்கிறார்.

விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குட்டி பாண்டியனுடன் விளையாடும் மீனா – வைரலாகும் வீடியோ!

நீதிமன்றத்தில் ஆறு மாதம் பாரதி மற்றும் கண்ணம்மா சேர்ந்து வாழ வேண்டும் என சொல்கின்றனர். அதனால் இருவரும் சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வந்த பரீனாவிற்கு குழந்தை பிறந்துள்ளதால் ஒரு மாதம் ஓய்வில் இருந்தார். தற்போது மீண்டும் அவர் சீரியல் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். அதனால் விரைவில் சீரியல் கதைக்களம் மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Vijay TV Bigg Boss 5 Promo 2 | குழந்தை போல அம்மாவை பார்த்து அழுத பிரியங்கா!

வில்லி இல்லாததால் சீரியலில் விறுவிறுப்பு குறைந்துள்ளது. கதை பாரதி மற்றும் கண்ணம்மாவை சுற்றியே சென்று கொண்டிருக்கிறது. அதனால் அரைத்த மாவையே அரைத்து வருகின்றனர். இதனால் கடுப்பான ரசிகர்கள் பரீனாவின் இன்ஸ்டா பக்கத்தில் சீக்கிரம் சீரியலில் ரீஎன்ட்ரி கொடுக்க வேண்டும் என கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் சீரியலில் மீண்டும் நடிக்க வந்த பரீனா அகில் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சுகேஷ் மற்றும் ஹேமா கதாபாத்திரத்தில் நடித்து வரும் லிசா உடன் எடுத்த புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!