Vijay TV Bigg Boss 5 Promo 2 | குழந்தை போல அம்மாவை பார்த்து அழுத பிரியங்கா!
விஜய் டிவி “பிக்பாஸ் சீசன் 5” நிகழ்ச்சி தொடங்கப்பட்டு தற்போது 80 நாட்கள் முடிவடைந்துள்ளது. இன்றைய எபிசோடில் பிரியங்கா அம்மா மற்றும் தம்பி வருவது போல ப்ரோமோ வெளியாகி உள்ளது.
பிக்பாஸ் ப்ரோமோ:
பிக்பாஸ் நிகழ்ச்சியில் மக்கள் விருப்பமான ப்ரீஸ் டாஸ்க் நடைபெற்று வருகிறது. போட்டியாளர்கள் முதல் ரசிகர்கள் வரை இந்த டாஸ்க் எப்போது வரும் என ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கின்றனர். நேற்றைய எபிசோடில் நிரூப்பின் அப்பா வந்து பேசியது எல்லாம் ரசிகர்களை பெரும்பாலும் ஈர்த்தது. மேலும் அமீர் அவர்களின் வாழ்க்கை கதையை சொன்னது பலரது மனதை உருகியது. இதுவரை ராஜு தான் டைட்டில் வின்னராக வேண்டும் என சொன்ன மக்கள் அமீர் வந்தால் நன்றாக இருக்கும் என்று சொல்லும் அளவிற்கு மாறி உள்ளது.
விஜய் டிவியில் ரீஎன்ட்ரி கொடுத்த முகேன் ராவ், கிறிஸ்துமஸ் தின கொண்டாட்டம் – ரசிகர்கள் உற்சாகம்!
மேலும் நேற்றைய எபிசோடில் ராஜு குடும்பம் வந்தது நன்றாக இருந்தது. இந்நிலையில் இன்றைய எபிசோட் குறித்த ப்ரோமோவிற்காக மக்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். முதல் ப்ரோமோவில் பாவ்னியின் சொந்தங்கள் வந்திருக்கின்றனர். அப்போது அமீர் உடன் நீ பழகுவது எல்லாம் சரி இல்லை என அவர் சொல்கிறார். அடுத்த எபிசோடில் அம்மா பாடல் ஒலிக்கப்படுகிறது. அதில் பிரியங்கா அம்மா வருகிறார்.
கொலை செய்யப்பட்ட விஜய் டிவி ‘பிக் பாஸ்’ அமீரின் அம்மா இவர் தானா? ரசிகர்கள் ஷாக்!
அவர் அழுது கொண்டே அம்மா அம்மா என குழந்தை போல ஓடுகிறார். பிரியங்காவின் அம்மா மற்றும் தம்பி வந்திருக்கின்றனர். அனைவரும் அவரது காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குகின்றனர். பிரியங்கா அழுவதை பார்த்து தாமரை தாங்க முடியாமல் இருக்கிறார். நீங்க ஒரு நல்ல பெண்ணை பெற்றிருக்கிறீர்கள் என சிபி சொல்கிறார். இந்த ப்ரோமோ பார்த்த ரசிகர்களுக்கு எமோஷனலாக நிகழ்ச்சி இருக்கிறது. மேலும் அமீர் குடும்பத்தினர் வர வேண்டும் என ஆவலுடன் மூன்றாம் ப்ரோமோவிற்கு காத்துக் கொண்டிருக்கின்றனர்.