தனது மகளுடன் வீடியோ வெளியிட்ட “பாண்டியன் ஸ்டோர்ஸ்” ஜீவா – இணையத்தில் வைரல்!

0
தனது மகளுடன் வீடியோ வெளியிட்ட
தனது மகளுடன் வீடியோ வெளியிட்ட "பாண்டியன் ஸ்டோர்ஸ்" ஜீவா - இணையத்தில் வைரல்!
தனது மகளுடன் வீடியோ வெளியிட்ட “பாண்டியன் ஸ்டோர்ஸ்” ஜீவா – இணையத்தில் வைரல்!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நான்கு அண்ணன், தம்பிகளில் ஒருவராக ஜீவா கதாபாத்திரத்தில் நடித்து வரும் வெங்கட் ரங்கநாதன் தனது மகளை மடியில் படுக்க வைத்து தனது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டு இருக்கிறார்.

நடிகர் வெங்கட்:

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி சீரியல்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. அந்த வகையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற மளிகை கடையை நடத்தி வரும் அண்ணன் தம்பிகளின் பாசத்தை கொண்டு ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் இரண்டாவது அண்ணன் கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர் வெங்கட் ரங்கநாதன். அவரை வெங்கட் என சொல்வதை விட ஜீவா என்று சொன்னால் தான் ரசிகர்களுக்கு தெரியும் அந்த அளவிற்கு அவர் பிரபலமானவர்.

பிரசவத்திற்கு பின் “பாரதி கண்ணம்மா” பரீனாவின் போட்டோஷூட் – ரசிகர்கள் வாழ்த்து!

அவருக்கு கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டதாகவும், அதனால் மிகவும் பாதிக்கப்பட்டதாகவும் இதய பாதிப்பு ஏற்படும் அளவிற்கு அவர் பாதிக்கப்பட்டதாக பேட்டி ஒன்றில் சொல்லி இருக்கிறார். அவர் நடிப்பு மட்டுமல்லாமல் நல்ல நடனம் ஆட கூடியவர். திருமணம் முடிந்து அவருக்கு ஒரு மகள் இருக்கும் நிலையில் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் டாடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

Vijay TV Bigg Boss 5 Promo | பைனலுக்கு போக வேண்டாம் என சொன்ன தாமரை, கோவப்பட்ட சஞ்சீவ்!

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வப்போது பல ரீல்ஸ் வீடியோக்களை பதிவிடுவார். இந்நிலையில் தற்போது தனது மகளை மடியில் படுக்க வைத்து தூங்க வைத்து வீடியோ பதிவிட்ட அவர், தனது அப்பா மடியில் நான் இதுபோல படுத்தாதே இல்லை என உணர்ச்சி வசப்பட்டு சொல்லி இருக்கிறார். மேலும் பல இடங்களில் எனக்கு என் குடும்பத்தை மிகவும் பிடிக்கும் என சொல்லி இருக்கிறார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!