பிரசவத்திற்கு பின் “பாரதி கண்ணம்மா” பரீனாவின் போட்டோஷூட் – ரசிகர்கள் வாழ்த்து!

0
பிரசவத்திற்கு பின்
பிரசவத்திற்கு பின் "பாரதி கண்ணம்மா" பரீனாவின் போட்டோஷூட் - ரசிகர்கள் வாழ்த்து!
பிரசவத்திற்கு பின் “பாரதி கண்ணம்மா” பரீனாவின் போட்டோஷூட் – ரசிகர்கள் வாழ்த்து!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் வில்லியாக வெண்பா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை பரீனா. இவர் தற்போது பிரசவத்திற்கு பின் பழையபடி தனது போட்டோஷூட்டை தொடங்கி இருக்கிறார்.

பாரதி கண்ணம்மா வெண்பா:

பாரதி கண்ணம்மா சீரியல் TRPயில் போட்டி போடும் சீரியல்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் பல புதுமுக நடிகர்கள் களமிறங்கினார்கள். தொடக்கத்தில் பெரிய வரவேற்ப்பை இந்த சீரியல் பெறாத நிலையில், பாரதி கண்ணம்மா திருமணத்திற்கு பின் கதை சூடுபிடிக்க தொடங்கியது. பாரதி கண்ணம்மா காதல் காட்சிகளுக்கு பல இளம் ரசிகர்களும் இருக்கின்றனர். நன்றாக சென்று கொண்டிருந்த அவர்களது வாழ்க்கையில், வெண்பா என்ற பெரிய இடி விழுந்தது.

பிரசவத்திற்கு முன் வரை நடித்த “பாரதி கண்ணம்மா” வில்லி பரீனா – ரசிகர்கள் நெகிழ்ச்சி!

பாரதி மனதை மாற்றி வெண்பா அவரை கல்யாணம் செய்ய நினைக்க அதை பாரதியின் அம்மா தடுத்து நிறுத்துகிறார். 8 வருடங்களாக பாரதி கண்ணம்மாவும் பிரிந்து இருக்கின்றனர். இந்நிலையில் சமீபத்தில் வெண்பா கதாபாத்திரத்தில் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வந்த பரீனா கர்ப்பமாக இருந்தார். அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. பிரசவத்திற்கு பின் ஒரு மாதம் அவர் ஓய்வில் இருக்கிறார். அதனால் கதையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு வெண்பா ஜெயிலில் இருப்பது போல காட்டப்பட்டுள்ளது.

Vijay TV Bigg Boss 5 Promo | பைனலுக்கு போக வேண்டாம் என சொன்ன தாமரை, கோவப்பட்ட சஞ்சீவ்!

இந்நிலையில் பிரசவ கால இடைவெளிக்கு பின் பரீனா பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார். தற்போது படப்பிடிப்பிலும் அவர் நடிக்க தொடங்கி இருக்கிறார். மேலும் மீண்டும் அதே அழகுடன் போட்டோஷூட் நடத்தி அதை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். அதை பார்த்த ரசிகர்கள் பிரசவம் முடிந்து ஒரே மாதத்தில் வெண்பா தன்னுடைய வேலையை தொடங்கி விட்டது ரொம்ப ஊக்குவிப்பது போல இருக்கிறது என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!