“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் இருந்து ஓய்வெடுத்து ஷாப்பிங் சென்ற மீனா – வைரலாகும் வீடியோ!

0
"பாண்டியன் ஸ்டோர்ஸ்" சீரியலில் இருந்து ஓய்வெடுத்து ஷாப்பிங் சென்ற மீனா - வைரலாகும் வீடியோ!
“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் இருந்து ஓய்வெடுத்து ஷாப்பிங் சென்ற மீனா – வைரலாகும் வீடியோ!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் மீனா கதாபாத்திரத்தில் நடிக்கும் ஹேமா சதீஸ், அவர் சீரியலில் இருந்து ஓய்வு எடுத்து ஷாப்பிங் செய்யும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் ஹேமா:

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் பல மொழிகளில் எடுக்கப்பட்ட ஒரு வெற்றிகரமான சீரியல் ஆகும். தமிழில் டாப் வரிசையில் இருக்கும் இந்த சீரியலில் முன்னணி கதாபாத்திரங்கள் பலர் மக்கள் மனதில் பிரபலமாக இருக்கின்றனர். அந்த வகையில் அந்த சீரியலில் நகைச்சுவை வில்லியாக மீனா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ஹேமா சதீஸ். அவர் வில்லியாக இருந்தாலும் அவரால் குடும்பத்தின் ஒற்றுமைக்கு எந்த பிரச்சனையும் வராமல் நடந்து கொள்வதே அவரது கதாபாத்திரத்திற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் வருவதற்கு காரணமாக அமைந்தது.

விரைவில் முடிவுக்கு வரும் விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியல்? ரசிகர்களுக்கு ஷாக்கிங் தகவல்!

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் தனியாக யூடுப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். அதில் ஷாப்பிங் வீடியோக்கள் படப்பிடிப்பு தல வீடியோ, தன்னுடைய வீட்டை சுற்றி காட்டுதல் போன்ற பல வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். அதில் தற்போது ஏழை, எளிய மக்கள் புது துணி வாங்க குறைவான விலையில் கிடைக்கும் கடைக்கு சென்று அங்கே வீடியோ பதிவிட்டு இருக்கிறார். படப்பிடிப்பு பிசியில் இருந்து ஓய்வு எடுத்து அவர் வெளியிட்ட அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

“நாம் இருவர் நமக்கு இருவர் 2” சீரியலில் ரீஎன்ட்ரி கொடுக்கும் பிக் பாஸ் ராஜு – அவரே சொன்ன விளக்கம்!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இந்த வாரம் முழுவதும் முல்லையை வைத்தே கதை நகர்ந்து வருகிறது. ஆனால் தனம் எதையோ மறைப்பதாக மீனாவிற்கு சந்தேகம் இருக்கிறது. மேலும் ஐஸ்வர்யா காலேஜ் போவதை அடிக்கடி திட்டிக் கொண்டே இருப்பதால் அவரும் வேலைக்கு போக முடிவு செய்துள்ளார். அதனால் இதை வைத்து சில பிரச்சனைகள் வர இருக்கிறது. இனி வரும் எபிசோடுகளில் கதையில் என்ன மாற்றம் வரும் என பொறுத்திருந்து பார்க்கலாம்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!