விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் செய்த சாதனை – மூர்த்தி வெளியிட்ட இன்ஸ்டா பதிவு!!

0
விஜய் டிவி
விஜய் டிவி "பாண்டியன் ஸ்டோர்ஸ்" சீரியல் செய்த சாதனை - மூர்த்தி வெளியிட்ட இன்ஸ்டா பதிவு!!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் செய்த சாதனை – மூர்த்தி வெளியிட்ட இன்ஸ்டா பதிவு!!

விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தொடங்கப்பட்டு மூன்று ஆண்டுகள் நிறைவடைந்து உள்ள நிலையில் நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளதாக அதில் நடித்து வரும் மூர்த்தி தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் TRP ரேட்டிங்கில் டாப் சீரியலில் ஒன்றாக இருக்கிறது. இந்த சீரியல் அண்ணன், தம்பி குடும்ப ஒற்றுமையை மையப்படுத்தி இருந்தாலும் இந்த சீரியலில் புதுசு புதுசாக திருமணம், வளைகாப்பு விழா என பிரம்மாண்ட நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. மேலும் அதில் விஜய் டிவி பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்து வருகின்றனர். கடந்த 2 வாரங்களாக கதையின் முக்கிய கதாபாத்திரமான லட்சுமி அம்மா இறப்பு குறித்த எபிசோடுகள் ஒளிபரப்பானது. மேலும் அவருக்கு இறுதி சடங்குகள் அனைத்தும் நிஜத்தை போல நடத்தப்பட்டது.

பாரதி கண்ணம்மா, பாண்டியன் ஸ்டோர்ஸை பின்னுக்கு தள்ளிய ரோஜா – TRP ரேட்டிங்!

அதில் நடித்த அனைத்து நடிகர்களும், நல்ல நடிப்பை வெளிப்படுத்தி இருந்தனர். குறிப்பாக கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்த சரவண விக்ரம் நல்ல நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். மேலும் லட்சுமி அம்மாவிற்காக மொட்டை அடித்துள்ளார். அதனால் அவருக்கும் நல்ல பாராட்டுக்கள் குவிந்தது. இந்நிலையில் அம்மா இறந்த சோகத்தில் இருந்த குடும்பத்தினர் தற்போது மீண்டு வருகின்றனர். அனைவரும் குலதெய்வ கோவிலுக்கு சென்று விளக்கு ஏற்ற இருப்பதாக கிளம்புகின்றனர்.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ வெங்கட் சீரியலில் இருந்து விலகியதற்கான காரணம் – பளீச் பேட்டி!

அப்போது கண்ணன் வர சொல்லலாமா என தனம் கேட்க, மூர்த்தியும் சரி என சொல்கிறார். ஆனால் கண்ணன் போக வேண்டாம் என ஐஸ்வர்யாவிடம் சொல்கிறார். மேலும் ஐஸ்வர்யாவின் சித்தி கஸ்தூரி ஐஸ்வர்யா கண்ணனை மன்னித்து ஏற்றுக் கொள்கிறார். இவ்வாறு கதை சென்று கொண்டிருக்க, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தொடங்கப்பட்டு மூன்று ஆண்டுகள் நிறைவடைந்து நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதாக அந்த சீரியலில் மூர்த்தியாக நடிக்கும் ஸ்டாலின் தனது இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதற்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!