“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் இருந்து ஓய்வெடுத்த தனம் சுஜிதா – சொந்த ஊருக்கு பயணம்!

0
"பாண்டியன் ஸ்டோர்ஸ்" சீரியலில் இருந்து ஓய்வெடுத்த தனம் சுஜிதா - சொந்த ஊருக்கு பயணம்!
“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் இருந்து ஓய்வெடுத்த தனம் சுஜிதா – சொந்த ஊருக்கு பயணம்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் தனம் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சுஜிதா படப்பிடிப்பில் இருந்து இடைவெளி எடுத்து தனது சொந்த ஊருக்கு சென்று வீடியோ ஒன்றை பதிவிட்டு இருக்கிறார்.

நடிகை சுஜிதா:

விஜய் டிவி வெற்றிக்கு முக்கிய காரணமாக அதில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களும், ரியாலிட்டி நிகழ்ச்சிகளும் தான் இருக்கிறது. அதன் TRP ரேட்டிங்கில் டாப்பில் உள்ள முக்கியமான சீரியல்களில் ஒன்று தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் ஸ்டாலினுக்கு ஜோடியாக மூத்த அண்ணியாக தனம் கதாபாத்திரத்தில் சுஜிதா நடித்து வருகிறார். குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமான சுஜிதா வாலி போன்ற படங்களிலும், சில முக்கிய சீரியல்களில் நடித்திருக்கிறார்.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கண்ணனுடன் ஜோடி சேர்ந்த ஐஸ்வர்யா விஜே தீபிகா – வைரலாகும் வீடியோ!

ஆனால் இதுவரை இல்லாத அளவிற்கு புகழை பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கொடுத்துள்ளது. குடும்பத்தின் ஒற்றுமை போகாமல் எவ்வளவு கஷ்டம் வந்தாலும் தாங்கி நிற்கும் மூத்த மருமகளாக அதில் அவர் தன்னுடைய எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். இந்நிலையில் அவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் செட் குறித்தும், தன்னுடைய வாழ்க்கை முறை குறித்து யூடுப் சேனலில் பல வீடியோக்களை பதிவிடுவார். அவரது வீடியோக்களை பார்க்க ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர்.

“இதுக்கெல்லாம் கோபி அசரவே மாட்டாரு” பாக்கியலட்சுமி முதல் பாரதி கண்ணம்மா வரை – டாப் கமெண்ட்ஸ்!

தற்போது அவர் புதிதாக வீடியோ ஒன்றை பதிவிட்டு இருக்கிறார். அதில் தன்னுடைய சொந்த ஊருக்கு போகிறதாகவும், சொந்தங்களை அறிமுகம் செய்ய இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். போகிற வழியில் இயற்கை காட்சிகளை பார்த்து ரசித்து அந்த இடம் குறித்த நினைவுகளை பகிர்ந்து இருக்கிறார். பின் ஆறு போன்ற பகுதிக்கு சென்று அந்த இடம் தனக்கு மிகவும் பிடித்த இடம் என தெரிவித்துள்ளார். அதன் பின் அவரது பூர்வீக வீடு மற்றும் சொந்தங்களை பார்த்த மகிழ்ச்சியை தனது மகனுடன் கொண்டாடி இருக்கிறார். இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் தற்போது வைரலாகி வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!