‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கண்ணனுடன் ஜோடி சேர்ந்த ஐஸ்வர்யா விஜே தீபிகா – வைரலாகும் வீடியோ!

0
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' கண்ணனுடன் ஜோடி சேர்ந்த ஐஸ்வர்யா விஜே தீபிகா - வைரலாகும் வீடியோ!
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' கண்ணனுடன் ஜோடி சேர்ந்த ஐஸ்வர்யா விஜே தீபிகா - வைரலாகும் வீடியோ!
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கண்ணனுடன் ஜோடி சேர்ந்த ஐஸ்வர்யா விஜே தீபிகா – வைரலாகும் வீடியோ!

விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் கண்ணனாக நடித்து வரும் நடிகர் சரவண விக்ரம் மற்றும் ஐஸ்வர்யாவாக நடித்திருந்த விஜே தீபிகா இருவரும் ஜோடியாக இணைந்து செய்துள்ள ரீல்ஸ் வீடியோ ஒன்று வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

சமீப காலமாக சமூக வலைதளங்களில் அதிகம் தென்பட்டு வரும் ஒரு முக்கியமான வீடியோ ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலின் கண்ணன் மற்றும் ஐஸ்வர்யாவின் ரீல்ஸ் காட்சிகள் தான். அதாவது ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் ஐஸ்வர்யாவாக சில காலம் மட்டுமே நடித்து மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருப்பவர் விஜே தீபிகா. இந்த சீரியலில் கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா கதாப்பாத்திரத்தில் நடித்து வந்த நடிகர் சரவண விக்ரம் மற்றும் விஜே தீபிகாவின் ஜோடிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்புகள் கிடைத்திருந்தது.

“இதுக்கெல்லாம் கோபி அசரவே மாட்டாரு” பாக்கியலட்சுமி முதல் பாரதி கண்ணம்மா வரை – டாப் கமெண்ட்ஸ்!

ஆனால் விஜே தீபிகாவின் திடீர் விலகல் காரணமாக இந்த ரீல் ஜோடி நெடு நாட்கள் நீடிக்கவிள்லை. இருந்தாலும் திரைக்கு பின்னால் விஜே தீபிகா மற்றும் நடிகர் சரவண விக்ரம் இருவரும் நண்பர்களாக பழகி வருகின்றனர். அந்த வகையில், இருவரும் ஒன்றாக சேர்ந்து போட்டோஷூட் புகைப்படங்கள், குறும்படங்கள் என பிசியாக இருந்து வரும் நிலையில் ஒரு யூடியூப் சேனலையும் நடத்தி வருகின்றனர். இவர்கள் இருவரையும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் மிஸ் செய்து வரும் ரசிகர்கள், சமூக வலைதளங்கள் மூலம் தங்களது அன்பையும், ஆதரவையும் கொடுத்து வருகின்றனர்.

‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் ரோஷினிக்கு பதில் வினுஷா – TRP இல் தொடரும் நம்பர் 1! ரசிகர்கள் குஷி!

இப்படி இருக்க நடிகர் சரவண விக்ரம் மற்றும் விஜே தீபிகா இருவரும் சேர்ந்து வைகைப்புயல் வடிவேலுவின் பிரபலமான வசனத்திற்கு ரீல்ஸ் செய்து அதனை தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட இந்த வீடியோ தற்போது வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதே நேரத்தில் இவர்கள் இருவரையும் ஒன்றாக பார்க்கும் ரசிகர்கள், இவர்கள் நிஜமாகவே காதலிக்கிறார்களா, அல்லது நண்பர்கள் தானா எனவும் கேள்வி எழுப்ப துவங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!