‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கடை திறப்பு விழாவில் ஜீவா செய்த காரியம் – வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் ஷாக்!
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது அனைவரும் மிகவும் எதிர்ப்பது வந்த கடை திறப்பு விழா குறித்த செய்திகள் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
கடை திறப்பு விழா:
பாண்டியன் ஸ்டார்ஸ் சீரியலில் தொடர்ந்து கடந்த வாரம் முதல் கடை திறப்பு விழா குறித்த சச்சரவுகள் நடைபெற்று வருகிறது. இதனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர் மிகுந்த மனஉளைச்சலில் உள்ளனர். புது கடை திறக்க வேண்டும் என்ற அவர்களின் பல நாள் கனவு நனவாகும் நேரத்தில் இது போல் நடப்பதால் என்ன செய்வதென்று தெரியாமல் முழித்து வருகின்றனர். கடைக்கு உரிய அனுமதி வாங்காமல் இருப்பதாக கடையை பூட்டி சீல் வைத்து விடுகின்றனர்.
BB Ultimate | கேப்டன்சி டாஸ்கில் முற்றிய மோதல், கதறி அழும் வனிதா – அதிர்ச்சியில் ஹவுஸ்மேட்ஸ்!
இதற்கு நியாயம் கேட்க போன இடத்ல் தான் கண்ணன், மீனா அப்பா கடையில் பணத்தை திருடியதாக நடந்த பிரச்சனையில் பணத்தை திருடியவனின் உறவுக்காரர் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினரை பழிவாங்க தான் இது போல் செய்துள்ளதாக தெரிய வருகிறது. இதனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர் அனைவரும் போராட்டம் நடத்துகின்றனர். இது போன்ற காட்சிகள் தான் சீரியலில் தற்போது ஒளிபரப்பாகி உள்ளது. இதனால் கடை திறக்கப்படுமா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இந்நிலையில், பாண்டியன் ஸ்டோர்ஸ் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பரவி வருகிறது. அதில், கடை திறப்பு விழா வெற்றிகரமாக நடந்து விடும் என்பது தெரிகிறது. நடுவில் ஜீவா ஒரு சேரில் உட்கார்ந்த படியே தூங்கி கொண்டிருக்கிறார். ஷூட்டிங் நடுவில் இந்த வேலை தான் நடக்கிறது என்று ரசிகர்கள் ஜீவாவை இணையத்தில் கலாய்த்து வருகின்றனர். மேலும், ஒரு வழியாக புது கடை திறக்கப்போவது தெரிந்து மகிழ்ச்சியில் உள்ளனர்.