BB Ultimate | கேப்டன்சி டாஸ்கில் முற்றிய மோதல், கதறி அழும் வனிதா – அதிர்ச்சியில் ஹவுஸ்மேட்ஸ்!

0
BB Ultimate | கேப்டன்சி டாஸ்கில் முற்றிய மோதல், கதறி அழும் வனிதா - அதிர்ச்சியில் ஹவுஸ்மேட்ஸ்!
BB Ultimate | கேப்டன்சி டாஸ்கில் முற்றிய மோதல், கதறி அழும் வனிதா - அதிர்ச்சியில் ஹவுஸ்மேட்ஸ்!
BB Ultimate | கேப்டன்சி டாஸ்கில் முற்றிய மோதல், கதறி அழும் வனிதா – அதிர்ச்சியில் ஹவுஸ்மேட்ஸ்!

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தற்போது தான் அதிக சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அதில் யாரும் எதிர்பார்க்காத வகையில் வனிதா கதறி அழும் சம்பவம் நடந்துள்ளது. இதனால் அனைத்து ஹவுஸ்மேட்ஸ்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கேப்டன்சி டாஸ்க்:

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தற்போது 24 மணிநேரமும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது இந்த வாரத்திற்கான கேப்டன்சி டாஸ்க் நடந்துள்ளது. அதில் வனிதாவும், சுருதியும் போட்டியிடுகின்றனர். இருவருக்கும் கண்களை கட்டிவிட்டு, எதிரில் இருக்கும் போர்டில் இருக்கும் கேப்டன்சி என்ற வார்த்தையை பூர்த்தி செய்ய வேண்டும். இது தான் டாஸ்க் என்று தெரிந்த பின்னர், இருவரின் கண்களும் கட்டி விடப்பட்டது.

‘பாக்கியலட்சுமி’ எழில் விஜே விஷாலுக்கு ரசிகர்களின் சர்பிரைஸ் பிறந்தநாள் கொண்டாட்டம் – வைரலாகும் வீடியோ!

அதில், சுருதி செய்து முடிக்கும் முன்னரே மிகவும் எளிமையாக வனிதா டாஸ்க்கை முடித்து விட்டார். ஆனால் டாஸ்க் முடிந்த பின்னர் அனைவரும் வனிதாவின் கண்கள் முழுமையாக காட்டாமல் இருந்தது. அதனால் தான் வனிதா எளிமையாக செய்தார் என்றும் பலரும் கருத்துக்களை தெரிவித்தனர். இதனால் அங்கு தொடர்ந்து சச்சரவு எழுந்தது. இறுதியாக வந்த பிக் பாஸ் குரல் யார் வெற்றி பெற்றது என்று நடுவராக இருந்த ஸ்நேகனிடம் கேட்டார்.

தன் அப்பாவிற்கு டிரஸ் செலக்ட் பண்ண சொல்லும் லட்சுமி – வெறுப்பில் பாரதி! அதிர்ச்சியில் கண்ணம்மா!

டாஸ்கை முழுமையாக முடித்ததால் வனிதா தான் வெற்றியாளர் என்றும், அவர் தான் இந்த வீட்டின் இந்த வார கேப்டன் என்று பிக் பாஸ் அறிவித்தார். ஆனால் தொடர்ந்து நடந்த வாக்குவாதத்தில் ஷாரிக் வனிதாவிடம் உங்களுக்கு கண்கள் சரியாக கட்டப்படாமல் இருந்ததால் தான் நீங்கள் ஜெயித்து விட்டீர்கள் என்று கூற சண்டை அதிகரிக்கிறது. ஆனால் வனிதா தன் பக்கம் நியாயம் இருப்பதாக கூறி வந்தார். இறுதியில் வனிதா நீடித்து வந்த சண்டையில் கதறி அழுவது போன்ற காட்சிகள் வந்துள்ளது. இதனால் ரசிகர்கள் மற்றும் ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!