‘மாஸ்டர்’ பட விஜய் ஆக மாறிய ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கதிர் – ரசிகர்களின் வாழ்த்து!

0
'மாஸ்டர்' பட விஜய் ஆக மாறிய 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' கதிர் - ரசிகர்களின் வாழ்த்து!
'மாஸ்டர்' பட விஜய் ஆக மாறிய 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' கதிர் - ரசிகர்களின் வாழ்த்து!
‘மாஸ்டர்’ பட விஜய் ஆக மாறிய ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கதிர் – ரசிகர்களின் வாழ்த்து!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் மூலம் மிகவும் அதிக புகழை அடைந்தவர் குமரன் தங்கராஜன். இவர் தற்போது வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று மிகவும் வைரலாக பரவி வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிர்:

சின்னத்திரை சீரியலில் நடித்து விட்டால் தமிழக மக்களின் மனதில் எளிதில் பதிந்து விடலாம். அந்த அளவிற்கு தற்போது சீரியல்கள் மக்கள் வாழ்க்கையோடு ஒன்றி உள்ளது. இதனால் சீரியல் நடிகர்கள் தங்களின் குடும்பத்தை சேர்ந்தவர்களை போல் மக்கள் நடத்த தொடங்கியுள்ளனர். வில்லியாக நடிக்கும் நடிகைகளை நேரில் பார்த்தால் திட்டுவதும், ஹீரோயினை பார்த்தால் அக்கறையோடு விசாரிப்பதும் பல இடங்களில் இன்னும் நடக்கும் சம்பவங்கள் தான். நடிகர், நடிகைகளின் நிஜ பெயர்களை விட அவர்கள் ஏற்று நடிக்கும் கதாப்பாத்திரங்களின் பெயர்களை கூறி அழைக்கும் அளவிற்கு மக்கள் ஒன்றியுள்ளனர்.

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் அடுத்த ட்விஸ்ட் – சௌந்தர்யா வீட்டிற்கு சென்ற வடிவுக்கரசி!

அந்த வகையில், விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டார்ஸ் தொடரில் கதிர் என்ற வேடத்தில் நடித்து வரும் நடிகரின் உண்மையான பெயர் குமரன் தங்கராஜன். இவர் விஜய் டிவியில் பல ஆண்டுகளுக்கு முன்னர் ஜோடி நிகழ்ச்சியில் வரும் குழு நடனமாடுபவர்களில் ஒருவராக இருந்தார். அதன் பிறகு, அந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். ஈரமான ரோஜாவே சீரியலில் மாறன் கதாபாத்திரத்தில் சில மாதங்கள் மட்டுமே நடித்தார். பின்னர், தற்போது 3 ஆண்டுகளுக்கும் மேலாக சென்று வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் கதிர் வேடத்தில் நடித்தார். அதில் இவருக்கு ஜோடியாக முல்லை கதாபாத்திரம் இருக்கிறது.

உடல்நிலை மோசமான நிலையில் “சூரரைப் போற்று” நாயகி அபர்ணா பாலமுரளி? அவரே சொன்ன விளக்கம்!

இவர்களின் கதிர் முல்லை ஜோடிக்கு என்று தமிழகத்தில் தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. இதனால் நல்ல வரவேற்பு மக்கள் மத்தியில் இருந்து வருகிறது. குமரன் அடிக்கடி, பாடல்களுக்கு நடனம் ஆடியும், ரீல்ஸ் செய்தும் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு வருவார். இப்போது மாஸ்டர் படத்தில் விஜய் தனது சிறுவயது காதல் கதையை கூறுவது போல் இருக்கும், ‘ காதல் கோட்டை’ படத்தின் கதையை விஜய் போலவே குமரன் நடித்து வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அனைவரும் லைக்குகள் மற்றும் அதிகமாக பகிர தொடங்கியதால் வீடியோ வைரல் ஆகியுள்ளது. பலரும் இவரின் நடிப்பை பார்த்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!