உடல்நிலை மோசமான நிலையில் “சூரரைப் போற்று” நாயகி அபர்ணா பாலமுரளி? அவரே சொன்ன விளக்கம்!

0
உடல்நிலை மோசமான நிலையில்
உடல்நிலை மோசமான நிலையில் "சூரரைப் போற்று" நாயகி அபர்ணா பாலமுரளி? அவரே சொன்ன விளக்கம்!
உடல்நிலை மோசமான நிலையில் “சூரரைப் போற்று” நாயகி அபர்ணா பாலமுரளி? அவரே சொன்ன விளக்கம்!

தமிழில் சூர்யா நடிப்பில் வெளிவந்த “சூரரைப் போற்று” திரைப்படம் மூலமாக பிரபலமானவர் அபர்ணா பாலமுரளி. அவருக்கு உடல்நிலை சரி இல்லை என செய்தி வெளியான நிலையில் அதற்கு விளக்கம் ஒன்றை அவர் அளித்துள்ளார்.

நடிகை அபர்ணா பாலமுரளி:

மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக மக்கள் மனதில் இடம் பிடித்தவர் அபர்ணா பாலமுரளி. தமிழ் சினிமாவில் 8 தோட்டாக்கள் படத்தில் நாயகியாக அறிமுகமானார். இவரது சொந்த ஊர் கேரள மாநிலத்தில் உள்ள திருச்சூர் நகரம் ஆகும். இவர்களது பெற்றோர்களும் மலையாள திரையுலகில் பிரபலமானவர்கள். இவரின் தந்தை கேபி பாலமுரளி மலையாள திரையுலகில் இசையமைப்பாளராக பணியாற்றி பிரபலமானவர். இவர் தாய் சோபா பாலமுரளி திருச்சூர், பாலக்காடு மாநிலத்தில் ஒரு பிரபல வழக்கறிஞர் ஆவார்.

விஜய் டிவி ‘பிக் பாஸ்’ அமீரின் அம்மா கொலை செய்யப்பட்டாரா? ஷாக் ரிப்போர்ட்! ரசிகர்கள் உருக்கம்!

இவர் தந்தை இசையமைப்பாளர் என்பதால் சிறு வயதில் பாடல் கற்றுக் கொண்டு பல பாடல்களை பாடி இருக்கிறார். மேலும் பரதநாட்டியம், மோஹினியாட்டம், குச்சிப்புடி போன்ற நடன கலைகளை கற்றுள்ளார். தமிழில் 2019 ஆம் ஆண்டு “சர்வம் தாள மையம்” திரைப்படத்தில் நாயகியாக நடித்தார். அதன் பின் 2020 இல் தமிழ் முன்னணி நடிகரான சூர்யா நடிப்பில் வெளியான “சூரரைப் போற்று” படத்தில் நடித்தது மூலம் திரையுலகில் முன்னணி நடிகையாக மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

விமானத்தில் வந்த இதயம், சைத்ராவிற்கு ஷபானா செய்த தியாகம் – வெளியான இன்ஸ்டா பதிவு!

இந்நிலையில் சமீபத்தில் செய்தி ஊடகங்களில் அவருக்கு உடல்நிலை சரி இல்லை எனவும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் பரவியது. அதனால் அவருடைய நெருங்கிய சொந்தங்கள் பதட்டம் அடைகின்றனர். அதனால் இது குறித்து அவரே விளக்கம் ஒன்றை பதிவு மூலம் அளித்துள்ளார். அதில் தான் நலமுடன் இருப்பதாகவும், தவறாக செய்திகளை பரப்ப வேண்டாம் என தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!