பாண்டியன் ஸ்டோர்ஸ் ஐஸ்வர்யா ‘வைஷாலி’ வெளியிட்ட திருமண புகைப்படங்கள் – ரசிகர்கள் வாழ்த்து மழை!

0
பாண்டியன் ஸ்டோர்ஸ் ஐஸ்வர்யா 'வைஷாலி' வெளியிட்ட திருமண புகைப்படங்கள் - ரசிகர்கள் வாழ்த்து மழை!
பாண்டியன் ஸ்டோர்ஸ் ஐஸ்வர்யா 'வைஷாலி' வெளியிட்ட திருமண புகைப்படங்கள் - ரசிகர்கள் வாழ்த்து மழை!
பாண்டியன் ஸ்டோர்ஸ் ஐஸ்வர்யா ‘வைஷாலி’ வெளியிட்ட திருமண புகைப்படங்கள் – ரசிகர்கள் வாழ்த்து மழை!

சமீபத்தில் தனது நீண்ட நாள் காதலரை கரம் பிடித்துள்ள பிரபல சீரியல் நடிகை வைஷாலி தணிகா, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமணம் குறித்து வெளியிட்ட பதிவுக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

திருமண வாழ்த்து

சமீபகாலமாக சினிமா மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் பலர் திருமண வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைத்து வருகின்றனர். அந்த வரிசையில் விஜய் டிவி சீரியல் நடிகை வைஷாலி தணிகா தற்போது திருமண பந்தத்துக்குள் நுழைந்துள்ளார். விஜய் டிவியின் ‘ராஜா ராணி’ சீரியல் மூலம் மக்களிடையே பிரபலமானவர் நடிகை வைஷாலி தணிகா. இதை தொடர்ந்து ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரிலும் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் சிறிது காலம் தோன்றி இருந்தார்.

சென்னைக்கு கிளம்பும் சரவணன், வருத்தத்தில் இருக்கும் சிவகாமி – இன்றைய “ராஜா ராணி 2” எபிசோட்!

இதன் மூலம் சில தமிழ் திரைப்படங்களில் தோன்றி வந்த இவர் தற்போது மீண்டுமாக சீரியலில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் ஜீ தமிழின் ‘கோகுலத்தில் சீதை’ மற்றும் சன் டிவியின் ‘மகராசி’ உள்ளிட்ட சில தொடர்களில் சில எதிர்மறையான வேடங்களை ஏற்று நடித்து வரும் இவருக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றுள்ளது. இப்போது நடிகை வைஷாலி தணிகா தனது நீண்ட நாள் காதலரான சத்ய தேவ் என்பவரை பெற்றோர்களின் சம்மதத்துடன் மனம் முடித்துள்ளார்.

‘பாரதி கண்ணம்மா’ ரோஷினி போலவே தோற்றமளிக்கும் நடிகை வினுஷா – இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்!

இவரது திருமணம் தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி சமீபத்தில் வைரலானது. இந்நிலையில் தனது திருமணம் குறித்து சமூக வலைதளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ள நடிகை வைஷாலி தணிகா, ‘இது எங்களின் கனவு திருமணம். அதிகாரப்பூர்வமாக எங்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. இப்போதிலிருந்து நான் திருமதி. தேவ்’ என்று நெகிழ்ச்சியாக குறிப்பிட்டுள்ளார். இவரது பதிவுக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here