‘பாரதி கண்ணம்மா’ ரோஷினி போலவே தோற்றமளிக்கும் நடிகை வினுஷா – இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்!

0
'பாரதி கண்ணம்மா' ரோஷினி போலவே தோற்றமளிக்கும் நடிகை வினுஷா - இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்!
'பாரதி கண்ணம்மா' ரோஷினி போலவே தோற்றமளிக்கும் நடிகை வினுஷா - இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்!
‘பாரதி கண்ணம்மா’ ரோஷினி போலவே தோற்றமளிக்கும் நடிகை வினுஷா – இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்!

விஜய் டிவியின் TRP ரேட்டிங் கிங்கான ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இருந்து நடிகை ரோஷினி விலகியுள்ள நிலையில் அவருக்கு பதிலாக புதிய கண்ணம்மாவாக நடித்து வரும் வினுஷாவின் போட்டோஷூட் புகைப்படங்கள் தற்போது வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

நடிகை வினுஷா

டிவி சேனல்களில் பிரைம் நேரத்தில் ஒளிபரப்பாக கூடிய தொடர்களுக்கு எப்போதும் வரவேற்பு கிடைப்பது உண்டு. அதுவும் மக்களின் ரசனைகளுக்கு ஏற்ப ஒளிபரப்பப்படும் விஜய் டிவியின் பிரைம் சீரியல்களுக்கு தனி இடம் கொடுக்கப்படுவது உண்டு. அந்த வகையில் விஜய் டிவியின் TRP ரேட்டிங்கை எப்போதும் ஏற்றத்தில் கொண்டு செல்லும் ஒரு முக்கியமான சீரியல் ‘பாரதி கண்ணம்மா’. இந்த தொடர் கண்ணம்மா என்ற கதாப்பாத்திரத்தை மயக்கம் வைத்து ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

விஜய் டிவி பாக்கியலட்சுமி சீரியலில் ‘இந்த’ கதாபாத்திரத்திற்கு விபத்து – அடுத்து வரப்போகும் திருப்பம்!

இந்த தொடர் பெண்மையை போற்றுவதால் இதற்கு மக்களிடையே நல்ல ரீச் கிடைத்து வருகிறது. அந்த வகையில் ‘பாரதி கண்ணம்மா’ தொடரில் கண்ணம்மா என்ற கதாப்பாத்திரத்தில் புதுமுக நடிகை ரோஷினி ஹரிப்ரியன் நடித்து வந்தார். கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாக ‘பாரதி கண்ணம்மா’ தொடரில் கண்ணம்மாவாக பயணித்து வந்த இவர் சமீபத்தில் அந்த தொடரில் இருந்து விலகி இருக்கிறார். இவரது திடீர் விலகல் குறித்து பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டு வருகிறது.

என்றாலும் இதன் உண்மை நிலவரம் இதுவரை வெளியாகவில்லை. இப்போது ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் ரோஷினிக்கு பதில் புதிய கண்ணம்மாவாக வினுஷா என்பவர் நடித்து வருகிறார். மாடலிங் துறையில் பயணித்து வரும் வினுஷா ஒரு டிக்டாக் பிரபலமும் கூட. இப்போது ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் கண்ணம்மா கதாப்பாத்திரத்துக்கு ஏற்ற நிறம் மற்றும் தோற்றத்தை நடிகை வினுஷா கொண்டிருப்பதால் அவர் இந்த ரோலுக்கு பொருத்தமானவராக இருப்பார் என்று சொல்லப்பட்டு வருகிறது.

தமிழ் வீட்டு திருமணத்திற்கு வரும் சரஸ்வதி, உடன் வரும் அருள் – இன்றைய “தமிழும் சரஸ்வதியும்” எபிசோட்!

மேலும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் கண்ணம்மாவாக நடித்து வரும் வினுஷாவின் படப்பிடிப்பு காட்சிகள் சில வெளியாகி இருக்கிறது. இதனுடன் நடிகை வினுஷாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் சிலவும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. என்றாலும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் நடிகை ரோஷினியின் இடத்தை வினுஷா பிடிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!