ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தனம் அண்ணி – ரசிகர்கள் ஷாக்!

0
ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தனம் அண்ணி - ரசிகர்கள் ஷாக்!
ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தனம் அண்ணி - ரசிகர்கள் ஷாக்!
ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தனம் அண்ணி – ரசிகர்கள் ஷாக்!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது தனம் அண்ணியாக அனைவரையும் கவர்ந்துள்ள நடிகை சுஜிதா மணப்பெண் அலங்காரத்தில் உள்ளது போல் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம்:

விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் தனம் அண்ணி கதாபாத்திரத்தில் நடித்து வரும் சுஜிதா தனது சிறு வயது முதலே திரைப்படங்களில் நடித்து வருகிறார். சுஜிதா கைக்குழந்தையாக பாக்யராஜின் முந்தானை முடிச்சு படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். அதன் பிறகு தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என்று பல மொழிகளிலும் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக வலம் வந்தவர்.

பீட்டர் பாலுடன் விவாகரத்திற்கு பின் வனிதா எடுத்த அதிரடி முடிவு – குவியும் பாராட்டுகள்!

அதன் பிறகு, பதின் வயதுகளிலேயே சீரியல்களில் கதாநாயகி வேடத்தில் நடிக்க தொடங்கிவிட்டார். இவர் நடித்த கணவருக்காக, திருவிளையாடல், மருதாணி, பைரவி ஆவிகளுக்கு பிரியமானவள், மகாராணி, பிருந்தாவனம், ரோஜா,அக்கா தங்கை , துளசி, மைதிலி, விளக்கு வச்ச நேரத்தில், ஒரு கை ஓசை போன்ற சீரியல்கள் அனைத்தும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அனைத்து சேனல்களிலும் பணியாற்றி உள்ளார். தற்போது நடித்து வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் கன்னட பதிப்பிலும் இதே கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்து உயிருக்கு போராடும் அஞ்சலி – ‘பாரதி கண்ணம்மா’ அடுத்த ட்விஸ்ட்!

அனைத்தையும் விட பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம் அண்ணியின் கதாபாத்திரம் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளார். இவர் சீரியலை தவிர ‘கதைகேளு கதைகேளு’ என்ற யூடூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். அதில், தற்போது மணப்பெண் அலங்காரத்தில் இருக்கும் மேக்கப் அப் லுக் ஒன்றை வீடியோவாக வெளியிட்டுள்ளார். அதில், ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மிகவும் அழகாக உள்ளார். இந்த மேக்கப் போடும் போது எடுத்த ஷார்ட் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!