விஜய் டிவி சீரியல்களில் கலக்கி வரும் கம்பம் மீனா வீட்டில் விசேஷம் – வெளியான புகைப்படம்!!

0
விஜய் டிவி சீரியல்களில் கலக்கி வரும் கம்பம் மீனா வீட்டில் விசேஷம் - வெளியான புகைப்படம்!!
விஜய் டிவி சீரியல்களில் கலக்கி வரும் கம்பம் மீனா வீட்டில் விசேஷம் - வெளியான புகைப்படம்!!
விஜய் டிவி சீரியல்களில் கலக்கி வரும் கம்பம் மீனா வீட்டில் விசேஷம் – வெளியான புகைப்படம்!!

விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி உள்ளிட்ட சீரியல்களில் நடித்து வருபவர் மீனா செல்லமுத்து. அவரது மகனுக்கு சமீபத்தில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றுள்ளது. அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

கம்பம் மீனா:

விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில், தனத்தின் அண்ணியாகவும், பாக்கியலட்சுமி சீரியலில் வீட்டில் வேலை செய்யும் செல்வியாகவும் நடித்து வருபவர் நடிகை மீனா செல்லமுத்து. அதுமட்டுமில்லாமல் தேன்மொழி பி.ஏ.,யில் பவானி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் இயக்குனர் பாரதிராஜாவின் தெற்கத்தி பொண்ணு சீரியலில் அறிமுகமாகி மணிரத்தினம், லோகேஷ்கனகராஜ் உள்ளிட்ட முன்னணி இயக்குனர்களின் படங்களில் நடித்து தனக்கென இடத்தை பிடித்துள்ளார்.

முடிவுக்கு வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல்? தொடர்ந்து அவிழும் கதை முடிச்சுகள்!

அவர் சொந்த ஊர் கம்பம், பத்தாம் வகுப்பு படித்த போதே திருமணமாகி விட்டதாம். அவருக்கு இரு மகன்கள் உள்ளனர். எல்.ஐ.சி முகவரான அவருக்கு, 2001 ஆம் ஆண்டு இயக்குனர் பாரதிராஜா தெற்கத்தி பொண்ணு சீரியலை தேனி மாவட்டத்தில் படமெடுத்த போது கிராமப் பெண் கதாபாத்திரம் தேவை இருந்ததால் நடிக்க தொடங்கினாராம். அவர் நடிப்பை பார்த்த பாரதிராஜா தொடர்ந்து நடிக்க வைத்தார். அதையடுத்து சிலம்பாட்டம், வெடிகுண்டு முருகேசன், பூவா தலையா, மாயாண்டி குடும்பத்தார், முண்டாசுபட்டி, களவாணி, மாத்தி யோசி என பல படங்களில் நடித்துள்ளார்.

விஜய் டிவி சீரியலில் இருந்து நான் விலகவில்லை – ரச்சிதாவின் குழப்பமான விளக்கம்!

மணிரத்தினத்தின் ராவணன், கடல் படங்களில் நடித்த அவர் ராவணன் ஹிந்தி ரீமேக்கிலும் நடித்துள்ளாராம். அதன் பின்னர் சின்னத்திரைக்கு நுழைந்த அவர், 4 சீரியல்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் வீட்டில் ஒரு விசேஷம் நடந்துள்ளதாக பகிர்ந்துள்ளார். அவரது மகனுக்கு திருமணம் நடந்துள்ளதாம். அவர் அதுக்குள்ள மாமியார் ஆகிவிட்டாரா என ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். அவர் நடிப்பு மட்டும் இல்லாமல் அவரின் குரலிற்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!