‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ லட்சுமி அம்மாவுடன் மீண்டும் இணைந்த தனம் – வைரல் வீடியோ!

0
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' லட்சுமி அம்மாவுடன் மீண்டும் இணைந்த தனம் - வைரல் வீடியோ!
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' லட்சுமி அம்மாவுடன் மீண்டும் இணைந்த தனம் - வைரல் வீடியோ!
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ லட்சுமி அம்மாவுடன் மீண்டும் இணைந்த தனம் – வைரல் வீடியோ!

சமீபத்தில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் இருந்து விலகிய நடிகை ஷீலாவை நடிகை சுஜிதா அவரது வீட்டில் வைத்து சந்தித்து பேசிய சில அழகிய தருணங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

விஜய் டிவியின் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில் மக்கள் மத்தியில் பிரபலமான ஒரு முக்கிய கதாப்பாத்திரம் என்றால் அது லட்சுமி அம்மா – தனம் கதாப்பாத்திரம் தான். ஏனென்றால் மாமியார் மருமகளை நடத்தும் விதம், மருமகள் மாமியாரை கவனித்து கொள்ளும் விதம் என எல்லாமே மிக அழகாக பிரதிபலிக்கும் இந்த ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் மாமியாருக்கும், மருமகளுக்கும் இடையே தற்போது ஒரு பிரிவு ஏற்பட்டுள்ளது. அதாவது, இந்த சீரியலில் லட்சுமி அம்மாவின் இறப்பு தனத்துக்கு ஒரு பெரிய இழப்பு தான்.

பாரதி கண்ணம்மாவை முந்திய பாண்டியன் ஸ்டோர்ஸ் – விஜய் டிவி சீரியல்களின் இந்த வார TRP ரேட்டிங்!

ஆனால் நிஜத்தில் அம்மா, மகள் போல பழகும் நடிகை ஷீலா மற்றும் சுஜிதா ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலுக்கு பிறகு நேரடியாக சந்தித்து பேசி, சிரித்த சில அழகிய தருணங்களை தனது யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளார் நடிகை சுஜிதா. அதில், நடிகை ஷீலா வீட்டுக்கு சென்றுள்ள சுஜிதா, ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலின் முதல் நாள் சூட்டிங் முதல் இறுதிக் காட்சிகள் வரை நடிகை ஷீலாவுடன் பயணித்த அனுபவத்தை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார்.

சன் டிவி சீரியல்களின் TRP ரேட்டிங் – சுந்தரியை பின்னுக்கு தள்ளிய ரோஜா!

குறிப்பாக நடிகை ஷீலாவின் மகனான நடிகர் விக்ராந்துடன் சுஜிதா நடித்துள்ள ‘அழகன்’ திரைப்படம் குறித்து பேசியுள்ளார். தவிர ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் தனத்துக்கு குழந்தை பிறந்ததும் அந்த குழந்தையை முதன் முதலாக லட்சுமி தான் தூக்க வேண்டும் எனவும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிகை ஷீலா நடித்துள்ள இறுதி சடங்கு காட்சிகள் குறித்தும் நடிகை சுஜிதா பாராட்டி பேசியுள்ளார். குறிப்பாக, பல ஆண்டுகளாக சின்னத்திரையில் அழுது, சிரித்து, வில்லி உட்பட பல ரோல்களில் நடித்தும் கிடைக்காத பாராட்டு அந்த இறப்பு சீன்களில் நடித்ததற்காக கிடைத்தது என மனம் நெகிழ்ந்துள்ளார் ஷீலா.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!