பாரதி கண்ணம்மாவை முந்திய பாண்டியன் ஸ்டோர்ஸ் – விஜய் டிவி சீரியல்களின் இந்த வார TRP ரேட்டிங்!

0
பாரதி கண்ணம்மாவை முந்திய பாண்டியன் ஸ்டோர்ஸ் - விஜய் டிவி சீரியல்களின் இந்த வார TRP ரேட்டிங்!
பாரதி கண்ணம்மாவை முந்திய பாண்டியன் ஸ்டோர்ஸ் - விஜய் டிவி சீரியல்களின் இந்த வார TRP ரேட்டிங்!
பாரதி கண்ணம்மாவை முந்திய பாண்டியன் ஸ்டோர்ஸ் – விஜய் டிவி சீரியல்களின் இந்த வார TRP ரேட்டிங்!

விஜய் டிவியில் ஒளிபரப்பான இந்த வார எபிசோடுகளில் அதிகமான பார்வையாளர்களை ஈர்த்து TRP ரேட்டிங்கில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் முதலிடத்தை பிடித்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் 2ம் இடத்தை வகிக்கிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

இன்றைய கால கட்டத்தில் சீரியல்கள் தான் மக்களின் ஒரே பொழுதுபோக்காக இருந்து வருகிறது. அந்த வகையில் அனைத்து சேனல்களிலும் தினசரி காலை முதல் இரவு வரையில் இடைவிடாமல் சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. ஆனால் குறிப்பிட்ட சில சீரியல்கள் மட்டுமே மக்களின் மனம் கவர்ந்த சீரியலாக இருந்து வருகிறது. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் சீரியல்களுக்கு மக்கள் மத்தியில் எப்போதும் வரவேற்பு கொடுக்கப்படுவது உண்டு.

சன் டிவி சீரியல்களின் TRP ரேட்டிங் – சுந்தரியை பின்னுக்கு தள்ளிய ரோஜா!

அப்படி இந்த வாரம் வெளியான எபிசோடுகளுடன் அதிகப்படியான பார்வையாளர்களை ஈர்த்து சுமார் 12 ரேட்டிங்குடன் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் முதலிடத்தை பிடித்துள்ளது. இதை தொடர்ந்து இந்த வாரம் விறுவிறுப்பான கதைக்களத்துடன் ஒளிபரப்பான ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் 11.8 ரேட்டிங்குடன் 2ம் இடத்தை பிடித்துள்ளது. இதையடுத்து சமையல் ஆர்டரில் பெற்ற பணத்தை தொலைத்துவிட்டு பாக்கியலட்சுமி கலங்கி நிற்கும் எபிசோடுகளுடன் ஒளிபரப்பான ‘பாக்கியலட்சுமி’ சீரியல் 10.8 ரேட்டிங்குடன் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது.

இதை தொடர்ந்து இந்த வாரத்தில் ஒளிபரப்பான விஜய் டிவியின் மற்ற சீரியல்கள் பெற்றுள்ள ரேட்டிங் குறித்து கீழே விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

 • ராஜா ராணி 2 – 10 ரேட்டிங்
 • தமிழும் சரஸ்வதியும் – 7.7
 • நாம் இருவர் நமக்கு இருவர் – 6.5
 • மௌனராகம் – 5.2
 • செந்தூரப்பூவே – 4.9
 • காற்றுக்கென்ன வேலி – 4.2
 • தென்றல் வந்து என்னை தொடும் – 4.1
 • நம்ம வீட்டு பொண்ணு – 3.7
 • பாவம் கணேசன் – 3.3
 • வேலைக்காரன் – 3.2
 • ராஜ பார்வை – 3.1

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here