விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குட்டி பாண்டியனுடன் விளையாடும் மீனா – வைரலாகும் வீடியோ!

0
விஜய் டிவி 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' குட்டி பாண்டியனுடன் விளையாடும் மீனா - வைரலாகும் வீடியோ!
விஜய் டிவி 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' குட்டி பாண்டியனுடன் விளையாடும் மீனா - வைரலாகும் வீடியோ!
விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குட்டி பாண்டியனுடன் விளையாடும் மீனா – வைரலாகும் வீடியோ!

விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் புதிதாக என்ட்ரி கொடுத்திருக்கும் குழந்தை நட்சத்திரம் குட்டி பாண்டியனை கொஞ்சி விளையாடுவது போல நடிகை ஹேமா வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.

நடிகை ஹேமா

தமிழ் சின்னத்திரை தொடர்களில் மக்களின் மனம் கவர்ந்த முன்னணி சீரியல்களில் ஒன்று விஜய் டிவியின் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’. விஜய் டிவியில் சுமார் 3 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் இந்த ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலுக்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் உள்ளனர். இந்த சீரியல் ஒரு கூட்டு குடும்ப வாழ்க்கையின் மகத்துவத்தை மிக அழகாக எடுத்துரைத்து வருவதால் இதற்கு பேமிலி ஆடியன்ஸ் அதிகம். இத்தொடர் மற்ற சீரியலின் கதைகளை போல இல்லாமல் இருந்தாலும், பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திற்கு அவ்வப்போது வில்லியாக தெரிபவர் மீனா கதாப்பாத்திரம் தான்.

“பாண்டியன் ஸ்டோர்ஸ்” கடைசி மருமகள் ஐஸ்வர்யா மீது பொறாமைப்படும் மீனா – அடுத்து வரப்போகும் ட்விஸ்ட்!

பணக்கார வீட்டு பெண்ணான மீனா, ஜீவாவை காதலித்து பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திற்கு மருமகளாக வர இந்த வீட்டில் வசதி இல்லை என்று அவ்வப்போது குற்றம் சாட்டி வருகிறார். அதே சமயத்தில் தனது குடும்பத்திற்கு ஏதாவது ஒரு பிரச்சனை என்றதும் முதல் ஆளாக சென்று அதனை சரி செய்வதும் மீனா தான். இப்படி இருவேறு விதமாக, அதாவது காமெடி கலந்த வில்லத்தனம் கொண்ட மீனாவின் கதாப்பாத்திரம் பலருக்கும் பிடித்தமான ஒன்றாக இருந்து வருகிறது.

இந்த தொடரில் மீனாவாக நடித்து வருபவர் பிரபல சின்னத்திரை நடிகை ஹேமா. விஜய் டிவி சீரியல்கள் மூலம் மக்களுக்கு நன்கு பரீட்சயப்பட்ட நடிகை ஹேமா தற்போது ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில் மீனாவாக கலக்கி வருகிறார். எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் ஹேமா, அவ்வப்போது படப்பிடிப்பு தளம், ட்ராவல், மேக்அப் என பல வீடியோக்களை தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறார்.

Vijay TV Bigg Boss 5 Promo 2 | குழந்தை போல அம்மாவை பார்த்து அழுத பிரியங்கா!

அந்த வகையில் தற்போது ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ஷூட்டிங்கின் போது கிடைக்கும் டீ பிரேக் நேரத்தில் அவர் செய்யும் சில வழக்கமான செயல்களை ஹேமாவின் டைரி என்ற தனது யூடியூப் பக்கத்தில் ஒரு வீடியோவாக வெளியிட்டுள்ளார். இதில், படப்பிடிப்பில் கொடுக்கப்படும் சிற்றுண்டி குறித்து ரசிகர்களிடம் பகிர்ந்து கொண்ட ஹேமா ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பத்துடன் புதிதாக இணைந்திருக்கும் குட்டி பாண்டியனை கொஞ்சி விளையாடிய காட்சிகளும் இந்த வீடியோவில் இடம்பிடித்திருக்கிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!