‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ பிரபலம் ஐஸ்வர்யாவிற்கு விரைவில் திருமணம் – கணவருடன் ஷாப்பிங்!
தமிழ் சின்னத்திரையில் பல டாப் சீரியல்களில் நடித்து புகழ் பெற்றவர் வைஷாலி. அவருக்கும், அவருடைய காதலருக்கு இடையே நிச்சயம் முடிந்த நிலையில் விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக தெரிவித்துள்ளார்.
நடிகை வைஷாலி:
விஜய் டிவி, சன் டிவி மற்றும் ஜீ தமிழ் ஆகிய சேனல்களில் பல சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகை வைஷாலி. இவர் விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘ராஜா ராணி’ சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பின் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் நடித்த இவரை திடீர் என சீரியல் குழுவினர் நீக்கியதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் இவர் சீரியலுக்கு வருவதற்கு முன்பே நடிகர் விஷால் நடிப்பில் வெளியான ‘கதகளி’ படத்தில் சிறிய வேடத்தில் நடித்துள்ளார்.
‘பிக் பாஸ் சீசன் 5’ பிரம்மாண்ட செட் – ‘ஆரம்பிக்கலாமா’ கமல் வசனத்துடன் வெளியான ப்ரோமோ!
மேலும் காதல் கசக்குதய்யா, கடுகு, சர்கார், பைரவா, ரெமோ போன்ற படங்களில் பல படங்களில் சின்ன வேடங்களில் நடித்துள்ளார். ஆனால் அவருக்கு அதன் மூலம் இல்லாமல் சீரியல்களில் நடித்ததே நல்ல வாய்ப்பாக அமைந்தது. சின்னத்திரை சீரியல்களில் நடித்தது மூலமாக அவருக்கு ஏராளமான வாய்ப்புகள் வந்தது. இதை தவிர மற்ற சில தனியார் தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பாகி வரும் மாப்பிள்ளை, லக்ஷ்மி வந்தாச்சு, போன்ற சீரியல்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் இவர் சத்யா என்பவரை நீண்ட நாட்களாக காதலித்து வருகிறார். இருவருக்கும் நிச்சயம் முடிந்துள்ளதாகவும் விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக தனது பிறந்தநாள் அன்று இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் திருமண ஷாப்பிங் செய்யும் சில புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.