‘பிக் பாஸ் சீசன் 5’ பிரம்மாண்ட செட் – ‘ஆரம்பிக்கலாமா’ கமல் வசனத்துடன் வெளியான ப்ரோமோ!

0
'பிக் பாஸ் சீசன் 5' பிரம்மாண்ட செட் - 'ஆரம்பிக்கலாமா' கமல் வசனத்துடன் வெளியான ப்ரோமோ!
'பிக் பாஸ் சீசன் 5' பிரம்மாண்ட செட் - 'ஆரம்பிக்கலாமா' கமல் வசனத்துடன் வெளியான ப்ரோமோ!
‘பிக் பாஸ் சீசன் 5’ பிரம்மாண்ட செட் – ‘ஆரம்பிக்கலாமா’ கமல் வசனத்துடன் வெளியான ப்ரோமோ!

விஜய் டிவியில் மிகவும் பிரம்மாண்டமான பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி நாளை முதல் ஒளிபரப்பப்பட உள்ளது. அது குறித்த ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது.

பிக்பாஸ் சீசன் 5:

தமிழ் சின்னத்திரையில் முதன்முறையாக சர்வதேச ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் 4 ஆண்டுகளுக்கு முன்பாக தொடங்கப்பட்டது. தமிழ் கலாச்சாரத்திற்கு இந்த நிகழ்ச்சி சரியாக வருமா என்ற தயக்கத்துடன் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சீசன் 1 மக்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்றது. அதில் முதல் பரிசை நடிகர் ஆரவ் தட்டிச் சென்றார். ஆனால் அந்த சீசனில் நடிகை ஓவியா தான் புகழின் உச்சியில் இருந்தார். அதன் பின் அடுத்ததடுத்த ஆண்டுகளில் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு மக்களிடம் வரவேற்பை பெற்றது.

‘தொகுப்பாளினி டூ பிக் பாஸ்’ – விஜய் டிவி பிரியங்காவின் சின்னத்திரை வெற்றிப் பயணம்! ரசிகர்கள் நெகிழ்ச்சி!

கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக நிகழ்ச்சி நடைபெறுமா என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கைகளை தாண்டி நிகழ்ச்சி வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இந்நிலையில், இந்த ஆண்டு பிக்பாஸ் சீசன் 5 தொடங்கப்பட இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது குறித்து ப்ரோமோ வீடியோக்கள் வெளியிடப்பட்டது. மேலும் போட்டியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த நிகழ்ச்சி நாளை (அக்.3) மாலை 6 மணி முதல் தொடங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜீவா கனவிலும் வந்த “பாண்டியன் ஸ்டோர்ஸ்” லட்சுமி அம்மா? வெளியான புகைப்படம்!

இந்நிலையில் தற்போது கமல் பிக்பாஸ் வீட்டில் இருப்பது போல ப்ரோமோ வெளியாகியுள்ளது. ஆரம்பிக்கலாமா என பிக்பாஸ் வீட்டின் கூரை மீது கமல் நிற்கிறார். மேலும் வீட்டின் முன்புறம் 5 என்ற எண் அமைக்கப்பட்டு இது ஐந்தாவது சீசன் என காட்டுவது போல இருக்கிறது. பிக்பாஸ் வீடு கடந்த சீசன் போல இல்லாமல் அதிகம் செலவு செய்து கட்டியது போல இருக்கிறது. இந்த ப்ரோமோ பார்த்த ரசிகர்களுக்கு நிகழ்ச்சி எப்போது தொடங்கும் என ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!