‘தொகுப்பாளினி டூ பிக் பாஸ்’ – விஜய் டிவி பிரியங்காவின் சின்னத்திரை வெற்றிப் பயணம்! ரசிகர்கள் நெகிழ்ச்சி!

0
'தொகுப்பாளினி டூ பிக் பாஸ்' - விஜய் டிவி பிரியங்காவின் சின்னத்திரை வெற்றிப் பயணம்! ரசிகர்கள் நெகிழ்ச்சி!
'தொகுப்பாளினி டூ பிக் பாஸ்' - விஜய் டிவி பிரியங்காவின் சின்னத்திரை வெற்றிப் பயணம்! ரசிகர்கள் நெகிழ்ச்சி!
‘தொகுப்பாளினி டூ பிக் பாஸ்’ – விஜய் டிவி பிரியங்காவின் சின்னத்திரை வெற்றிப் பயணம்! ரசிகர்கள் நெகிழ்ச்சி!

தமிழ் தொலைக்காட்சிகளில் முன்னணி தொகுப்பாளினியாக இருந்து வரும் விஜே பிரியங்காவின் மீடியா பயணம் முதல் பிக்பாஸ் போட்டியாளர் வரை அவர் கடந்து வந்த வெற்றிப்பாதை குறித்த தகவல்கள் இந்த பதிவில் இணைக்கப்பட்டுள்ளது.

விஜே பிரியங்கா

எண்ணற்ற சேனல்கள், நட்சத்திரங்களை உள்ளடக்கிய தமிழ் சின்னத்திரை உலகில் அதிகளவு பார்வையாளர்களை கொண்டிருக்கும் ஒரே தொலைக்காட்சி என்றால் அது விஜய் டிவி தான். விஜய் டிவி துவங்கிய ஆரம்ப கால கட்டங்களில் சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள் என பல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டு வந்தாலும் மக்களின் ஆதரவு கிடைக்க நெடு நாட்கள் பிடித்தது. அந்த வகையில் கடந்த 10 ஆண்டுகளாக தமிழ் சின்னத்திரை உலகில் விஜய் தொலைக்காட்சி பெரிய வளர்ச்சியை சந்தித்துள்ளது.

ஜீவா கனவிலும் வந்த “பாண்டியன் ஸ்டோர்ஸ்” லட்சுமி அம்மா? வெளியான புகைப்படம்!

அதே நேரத்தில் விஜய் டிவிக்குள் வந்தாலே சினிமா வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையும் புதிய முயற்சியாளர்கள் இடையே உருவாகியுள்ளது. இப்படி சாதாரண ஒரு சென்னை பெண்ணாக வளர்ந்து விஜய் டிவியின் தவிர்க்க முடியாத விஜேவாக உயர்ந்து நிற்கும் விஜே பிரியங்காவின் வெற்றிப்பயணம் குறித்து இப்பதிவில் காணலாம். கர்நாடகா மாநிலம், பெங்களூருவை சொந்த ஊராக கொண்ட விஜய் டிவி புகழ் விஜே பிரியங்கா தேஷ்பாண்டே வளர்ந்தது, படித்தது எல்லாமே சென்னையில் தான்.

“பாண்டியன் ஸ்டோர்ஸ்” மீனா வெளிட்ட காமெடி வீடியோ – குவியும் லைக்குகள்!!

சிறுவயதிலேயே அப்பாவை இழந்த பிரியங்கா, அம்மாவின் ஆதரவுடன் எத்திராஜ் கல்லூரி MBA பட்டம் பெற்றிருக்கிறார். படிக்கும் போதே மீடியா துறை மீது ஆர்வம் கொண்ட பிரியங்கா, ‘டேடி மை ஹீரோ’ ரியாலிட்டி ஷோக்கள் மூலம் சின்னத்திரைக்குள் நுழைந்தார். விஜய் டிவியில் விஜேவாக பணியாற்ற வாய்ப்பு கிடைத்த பின்பு, ‘சினிமா காரம் காப்பி’, ‘ஒல்லி பெல்லி’, ‘சூப்பர் சிங்கர்’, ‘காமெடி ராஜா கலக்கல் ராணி’, ‘ஸ்டார்ட் மியூஸிக்’ உள்ளிட்ட நட்சத்திர நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மக்கள் மத்தியில் நிரந்தரமான இடத்தை பிடித்தார் இவர்.

பிரியங்காவின் ஆரம்ப மீடியா வாழ்க்கையை பொருத்தளவு, அவருடைய நெருங்கிய விஜே நண்பர் ஒருவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்கு வராததால் தற்காலிக தொகுப்பாளினியாக அறிமுகமான இவர் அப்படியே விஜே பணியில் நிரந்தரமான இடத்தை பிடித்தார். விஜய் டிவியில் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக பணி செய்து வரும் இவர் அதே சேனலில் பணிபுரியும் பிரவீன் என்பவரை காதலித்து திருமணமும் செய்து கொண்டார். இப்போது தமிழ் சின்னத்திரை உலகில் தவிர்க்கமுடியாத விஜே உருவெடுத்துள்ள பிரியங்கா, பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சிக்கு செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!