குழந்தைகளுக்கு பான் கார்டு வேண்டுமா? விண்ணப்பிக்க எளிய வழிமுறைகள் இதோ!

0
குழந்தைகளுக்கு பான் கார்டு வேண்டுமா? விண்ணப்பிக்க எளிய வழிமுறைகள் இதோ!
குழந்தைகளுக்கு பான் கார்டு வேண்டுமா? விண்ணப்பிக்க எளிய வழிமுறைகள் இதோ!
குழந்தைகளுக்கு பான் கார்டு வேண்டுமா? விண்ணப்பிக்க எளிய வழிமுறைகள் இதோ!

இந்தியாவில் பான் கார்டு நிதி பரிவர்த்தனைகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. அத்துடன் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தான் பான் கார்டு வழங்கப்படும் நடைமுறை இருந்தது. ஆனால் இப்போது 18 வயதிற்கும் கீழ் உள்ளவர்களுக்கும் பான் கார்டை பெற முடியும். இதற்கான வழிமுறைகளை பற்றி விரிவாக பார்க்கலாம்.

பான் கார்டு

இந்தியாவில் பான் கார்டு தற்போது அனைத்து நிதி பரிவர்த்தனைகளுக்கும் தேவைப்படுகிறது. மேலும் வங்கிகளில் கணக்கு தொடங்கும் போதும் பான் கார்டு அவசியமானதாக உள்ளது. அதனால் நாள்தோறும் பான் கார்டுக்கு ஏராளமானோர் விண்ணப்பித்து வருகின்றனர். இப்பொழுது விண்ணப்பித்த 15 நாட்களில் பான் கார்டு கைகளில் கிடைக்கிறது. மேலும் பான் கார்டை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என்று கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அத்துடன் இணைக்கவில்லையென்றால் ரூ.1000 முதல் ரூ.10000 வரை அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஏப்ரல் 1 முதல் மீண்டும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்? முதல்வர் இன்று முக்கிய ஆலோசனை!

இதற்கான கால அவகாசம் வருகிற 31க்குள் முடிவடைகிறது. மேலும் தற்போது 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே பான் கார்டு வழங்கப்பட்டு வந்தது. இப்போது 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கும் பான் கார்டு பெறுவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் 18வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு அவர்கள் பெற்றோர் தான் விண்ணப்பிக்க வேண்டும். அவர்களால் நேரடியாக பான் கார்டுக்கு விண்ணப்பிக்க முடியாது. இதற்கு விண்ணப்பிக்க முதலாவதாக NSDL இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.

இப்போது விண்ணப்பதாரரின் பெயர், முகவரி, வயது உள்ளிட்ட தகவல்கள் அனைத்தையும் உள்ளிட்ட வேண்டும். அத்துடன் விண்ணப்பதாரரின் வயதுச் சான்று மற்றும் பெற்றோரின் புகைப்படம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும் பெற்றோரின் கையொப்பத்தை பதிவேற்றம் செய்ய வேண்டியது முக்கியமானதாகும். இப்போது இதற்கான கட்டணத்தை செலுத்தி படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும். அடுத்ததாக தங்களுக்கு ரசீது எண் வழங்கப்படும். இந்த எண்ணை பயன்படுத்தி விண்ணப்பத்தின் நிலையை அறிந்து கொள்ளலாம். தங்களின் பான் கார்டு விண்ணப்பித்த பிறகு 15 நாட்களில் அஞ்சல் அலுவலகம் மூலமாக தங்களின் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!