‘பாக்கியலட்சுமி’ கோபி சதீஷ் யார் தெரியுமா? யாரும் அறியாத தகவல்கள் இதோ! ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் கோபியாக நடித்து மக்களிடம் இருந்து ஏகப்பட்ட விமர்சனங்களை பெற்று வரும் நடிகர் சதீஷ் அவர்களின் கடந்த கால வாழ்க்கை பற்றி தெரியாத சில முக்கியமான தகவல்களை இப்பதிவில் காணலாம்.
பாக்கியலட்சுமி கோபி
தமிழ் சீரியல்களில் முன்னணி இடத்தை வகித்திருக்கும் முக்கியமான ஒரு தொடர் ‘பாக்கியலட்சுமி’. விஜய் டிவியில் சுமார் 400 எபிசோடுகளை கடந்து பிரைம் நேரத்தில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் இந்த ‘பாக்கியலட்சுமி’ சீரியல் ஒரு சாதாரண குடும்பத் தலைவியை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருகிறது. அதனால் இதற்கு குடும்ப ஆடியன்ஸ் அதிகம். குறிப்பாக இந்த ‘பாக்கியலட்சுமி’ சீரியல் ஒவ்வொரு குடும்பப் பெண்களின் நிலைமையையும் மிக அழகாக சித்தரிப்பதால், இது சுமார் 8 இந்திய மொழிகளில் தயாரிக்கப்பட்டு ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
தமிழக அரசின் தொழில்துறை திட்டம் 4.0 – ரூ. 2,201 கோடி ஒதுக்கீடு! முதல்வர் உத்தரவு!
இப்போது தமிழில் ‘பாக்கியலட்சுமி’ என்ற பெயரில் தயாரிக்கப்பட்டு வரும் இந்த சீரியலில் அப்பாவி குடும்பத்தலைவியான பாக்கியாவின் கணவர் கோபி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகர் சதீஷ். இத்தொடரில் 3 வளர்ந்த பிள்ளைகளுக்கு அப்பாவாக இருந்தும் காதலியை திருமணம் செய்து கொள்ள துடிக்கும் ஒரு சர்ச்சைக்குரிய கதாப்பாத்திரமாக வரும் நடிகர் சதீஷ் ரசிகர்களிடம் இருந்து வாங்காத திட்டுகள், விமர்சனங்கள் கிடையாது. என்றாலும் நாய் வேஷம் போட்டால் குலைத்து தானே ஆக வேண்டும் என்பது போல எல்லா விமர்சனங்களையும் ஏற்றுக்கொண்டு ‘பாக்கியலட்சுமி’ கோபியாக பயணித்து வருகிறார்.
தமிழக பல்கலைக்கழகத்தில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு..!
நடிகர் சதீஷின் ஆரம்ப கால வாழ்க்கையை பார்க்கையில் அவர் பிறந்தது, வளர்ந்தது, படித்தது எல்லாமே சென்னையில் தான். ஆரம்பத்தில் சினிமா திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த சதீஷ், எம்ஜிஆர் ஆகவும், ராமானுஜம் ஆகவும் நடித்திருக்கிறார். மேலும், தனி ஒருவன், இருமுகன் உள்ளிட்ட சில திரைப்படங்களிலும் இவரை காண முடியும். தவிர 2000ம் ஆண்டு முதல் சின்னத்திரையில் அறிமுகமான சதீஷ் மந்திர வாசல், சூலம், ஆனந்தம், கல்யாண பரிசு, மகாராணி உள்ளிட்ட சூப்பர் ஹிட் சீரியல்களில் நடித்திருக்கிறார். நடிகர் சதீஷுக்கு நடிப்பு தவிர மாடலிங், விளம்பர துறைகளிலும் ஆர்வம் உண்டு. இப்படிப்பட்ட பின்புலம் கொண்ட நடிகர் சதீஷ் தற்போது ‘பாக்கியலட்சுமி’ சீரியலின் கோபியாக மக்களை மகிழ்வித்து வருகிறார்.