IITs, IIMs, மத்திய பல்கலைக்கழகங்களில் 11,000 காலிப்பணியிடங்கள் – அமைச்சரின் சூப்பரான தகவல்!!

0
IITs, IIMs, மத்திய பல்கலைக்கழகங்களில் 11,000 காலிப்பணியிடங்கள் - அமைச்சரின் சூப்பரான தகவல்!!
IITs, IIMs, மத்திய பல்கலைக்கழகங்களில் 11,000 காலிப்பணியிடங்கள் - அமைச்சரின் சூப்பரான தகவல்!!
IITs, IIMs, மத்திய பல்கலைக்கழகங்களில் 11,000 காலிப்பணியிடங்கள் – அமைச்சரின் சூப்பரான தகவல்!!

நாடு முழுவதும் உள்ள IITs, IIMs, மத்திய பல்கலைக்கழகங்களில் 11,000க்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தொடர்பான விரிவான தகவல்களை பார்ப்போம்.

வேலைவாய்ப்பு

நாட்டில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த டிசம்பர் 7ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் ஒவ்வொரு துறை வாரியான கோரிக்கைகள் கேட்டறியப்பட்டு வருகின்றன. இதில் கல்வித்துறையின் சார்பாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறிருப்பதாவது, இந்தியாவில் 45 மத்தியப் பல்கலைக் கழகங்களில், பேராசிரியர், இணைப் பேராசிரியர், உதவிப் பேராசிரியர் என 18,956 அனுமதிக்கப்பட்ட பணியிடங்களில் 6,180 பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

Follow our Instagram for more Latest Updates

இதேபோல், இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் 11,170 அனுமதிக்கப்பட்ட பணியிடங்களில் 4,502 பணியிடங்கள் காலியாக உள்ளன என்று புள்ளி விவரங்கள் தெரிவிப்பதாக கூறியுள்ளார். இதையடுத்து இந்திய மேலாண்மை நிறுவனங்களில் (IIMs) 1,566 ஆசிரியர் பணியிடங்களில் 493 பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இனி ஒவ்வொரு வருடமும் மாநில காவல்துறையில் 2100 காலிப்பணியிடங்கள் – அதிகாரபூர்வ அறிவிப்பு!

Exams Daily Mobile App Download

அதன்படி நாட்டில் மொத்தமாக IITs, IIMs, மத்திய பல்கலைக்கழகங்களில் 11,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரிவித்துள்ளார். அதன்படி இனி வரும் காலங்களில் ஆசிரியர்களுக்கான வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு பேராசிரியர், இணைப் பேராசிரியர், உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!