தமிழகத்தில் மாறுதல் பெற்ற அரசு ஆசிரியர்களுக்கான பணி விடுப்பு – தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவு!

0
தமிழகத்தில் மாறுதல் பெற்ற அரசு ஆசிரியர்களுக்கான பணி விடுப்பு - தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவு!
தமிழகத்தில் மாறுதல் பெற்ற அரசு ஆசிரியர்களுக்கான பணி விடுப்பு - தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவு!
தமிழகத்தில் மாறுதல் பெற்ற அரசு ஆசிரியர்களுக்கான பணி விடுப்பு – தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவு!

தமிழகத்தில் பொது மாறுதல் பெற்ற ஆசிரியர்களுக்கான பணி விடுப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை முதன்மை கல்வி அலுவலர்களுக்கு தொடக்கக் கல்வி இயக்குநர் வழங்கியுள்ளார். மேலும், தற்காலிக ஆசிரியர்கள் விவரங்களை பூர்த்தி செய்து அனுப்பும் படி அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ஆசிரியர் பணி விடுப்பு:

தமிழகத்தில் உள்ள ஒன்றிய ஊராட்சி, நகராட்சி, அரசு தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளியில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர், பட்டதாரி மற்றும் முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் அனைத்தும் தற்காலிக ஆசிரியர்களை கொண்டு நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், இந்த தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்றவர்கள் மற்றும் வீடு தேடி சென்று கல்வி வழங்கும் திட்டத்தில் பணியாற்றியவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அப்படி பணியில் அமர்த்தப்படும் தற்காலிக ஆசிரியர்களில், இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.7,500 ஊதியமாகவும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.10,000 ஊதியமாகவும், முதுகலை ஆசிரியர்களுக்கு ரூ.12,000 ஊதியம் என்ற அடிப்படையில் பணி நியமனங்களை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இதனிடையே, தொடக்க கல்வி இயக்க நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வரும் அரசு, நகராட்சி, ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி மேலாண்மைக் குழுவின் ஒப்புதலின் படி தற்காலிக இடைநிலை, பட்டதாரி மற்றும் முதுநிலை ஆசிரியர்கள் அதற்கான விவரங்களை சரியாக பூர்த்தி செய்து இன்று பிற்பகல் 4 மணிக்குள் [email protected] என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பும் படி முதன்மை கல்வி அலுவலர்கள் அறிவித்துள்ளனர்.

தமிழக பள்ளி மாணவர்களுக்கான அமைச்சரின் அறிவுரை – தகவல் வெளியீடு!

மேலும், 2021-2022 ஆம் ஆண்டு பொது மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொண்டு பணி ஆணை பெற்று மாறுதல் பெற்ற ஈராசிரியர் (பதிலி ஆசிரியர்கள்) வருகை இன்மை காரணமாக பள்ளியில் இருந்து விடுவிக்கப்படாமல் இருந்தால், அப்பணியிடத்திற்கு தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டு இருப்பின் அந்த மாறுதல் பெற்ற ஆசிரியர்கள் பணி விடுப்பு செய்திட தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என முதன்மை கல்வி அலுவலர்களுக்கு தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!