தமிழக அரசுப் பள்ளியில் காத்திருக்கும் ஆசிரியர் பணியிடங்கள் – பட்டதாரிகள் விண்ணப்பிக்க தயாராகுங்கள்!

0
தமிழக அரசுப் பள்ளியில் காத்திருக்கும் ஆசிரியர் பணியிடங்கள் - பட்டதாரிகள் விண்ணப்பிக்க தயாராகுங்கள்!

 உதகை செவித்திறன் குறையுடையோருக்கான அரசு உயர்நிலைப் பள்ளி ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை புதிதாக வெளியிட்டுள்ளது. இதில் ஆசிரியர், துணை விடுதி காப்பாளர் ஆகிய பணிகளுக்கென ஒதுக்கப்பட்டுள்ள காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு டிகிரி தேர்ச்சி பெற்ற நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் உதகை செவித்திறன் குறையுடையோருக்கான அரசு உயர்நிலைப் பள்ளி
பணியின் பெயர் ஆசிரியர், துணை விடுதி காப்பாளர்
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 29.01.2024
விண்ணப்பிக்கும் முறை Offline

தமிழக அரசு காலியிடங்கள்:

உதகை செவித்திறன் குறையுடையோருக்கான அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியர், துணை விடுதி காப்பாளர் ஆகிய பணிகளுக்கென பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளது.

ஆசிரியர் கல்வி:

இப்பணிகளுக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் D.T.Ed + செவித்திறன் சிறப்பு படிப்பு, B.Sc + B.Ed முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.

ஆசிரியர் வயது:

இந்த தமிழக அரசு சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு குறித்த விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணவும்.

ஆசிரியர் மாத சம்பளம்:

ஆசிரியர் பணிக்கு ரூ.15,000/- என்றும்,

துணை விடுதி காப்பாளர் பணிக்கு ரூ.12,000/- என்றும் மாத சம்பளமாக வழங்கப்படும்.

ஆசிரியர் தேர்வு செய்யும் விதம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆசிரியர் விண்ணப்பிக்கும் விதம்:

இந்த தமிழக அரசு சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் தங்களது விண்ணப்பத்தை தலைமை ஆசிரியர், செவித்திறன் குறையுடையோருக்கான அரசு உயர்நிலைப்பள்ளி, தாவரவியல் பூங்கா சாலை, உதகை என்ற முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். 29.01.2024 என்பது இப்பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் ஆகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!