ரேஷன் கார்டில் புதிதாக குழந்தை பெயரை சேர்ப்பது எப்படி? தேவையான ஆவணங்கள் – முழு விவரம்!

0
ரேஷன் கார்டில் புதிதாக குழந்தை பெயரை சேர்ப்பது எப்படி? தேவையான ஆவணங்கள் - முழு விவரம்!

தமிழகத்தில் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் புதிதாக பிறந்த குழந்தையின் பெயரை எப்படி இணைப்பது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

ரேஷன் கார்டு

தமிழகத்தில் உள்ள மக்களுக்கு அரசின் அனைத்து சலுகைகளும் ரேஷன் கார்டு மூலமாகவே வழங்கப்படுகிறது. இந்நிலையில் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் தங்களுடைய குழந்தைகளின் பெயரையும் அதில் சேர்த்தால் அதிகமான பலன்கள் கிடைக்கும். அது எப்படி சேர்ப்பது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். இதனை செய்ய நீங்கள் அரசு அலுவலகத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை.

வீட்டில் இருந்தே ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். முதலில் உங்களுடைய மாநில உணவுத் துறை இணையதளத்திற்கு செல்ல வேண்டும். அதில் “Add member to ration card” என்ற ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். அதில் கேட்கப்பட்ட விவரங்களை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். பின் submit பட்டனை கிளிக் செய்ய வேண்டும். உங்களுடைய விண்ணப்பம் பதிவு செய்யப்படும். விண்ணப்பத்தின் நிலையை சரிபார்க்க “Check Beneficiary Status” விருப்பத்தை பயன்படுத்தலாம்.

தேவையான ஆவணங்கள்

  • குழந்தையின் பிறப்புச் சான்றிதழ்
  • குடும்பத் தலைவரின் ஆதார் அட்டை
  • ரேஷன் கார்டு நகல்
  • குழந்தையின் ஆதார்

    Follow our Twitter Page for More Latest News Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!