TNPSC Group 4 VAO தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு – இன்னும் 2 நாட்கள் மட்டுமே!

0
TNPSC Group 4 VAO தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு - இன்னும் 2 நாட்கள் மட்டுமே!
TNPSC Group 4 VAO தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு - இன்னும் 2 நாட்கள் மட்டுமே!
TNPSC Group 4 VAO தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு – இன்னும் 2 நாட்கள் மட்டுமே!

TNPSC குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பை கடந்த மாதம் டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் வெளியிட்டார். இதன் அடிப்படையில் குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ளன, எனவே விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் இதுவரை சுமார் 13 லட்சம் பேர் குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

முக்கிய தகவல்:

தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவையான ஊழியர்களை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் அரசு தேர்வு செய்து வருகிறது. திறமையான ஊழியர்களை கண்டறிய பல்வேறு போட்டித்தேர்வுகள் மற்றும் நேர்காணல் ஆகியவற்றை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகின்றனர். கொரோனா எதிரொலி காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக போட்டித்தேர்வுகள் எதுவும் நடைபெறவில்லை. இதனால் போட்டித்தேர்வுக்கு தயாராகி வந்தவர்கள் வருடக்கணக்கில் காத்திருந்தனர். மேலும் தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு அனைத்து துறைகளிலும் பல நல்ல திட்டங்களை தற்போதைய தமிழக அரசு அமல்படுத்தி வருகிறது. அந்த வகையில் TNPSC மூலம் நடத்தப்படும் போட்டித் தேர்வுக்கான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.

TN Job “FB  Group” Join Now

இதன் அடிப்படையில் குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுகளுக்கான அறிவிப்பு வெளியாகி விண்ணப்பதிவு கால அவகாசம் மார்ச் 23 ஆம் தேதி வரை வழங்கப்பட்டது. குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு மே மாதம் 21 ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள 7,382 பணியிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்படும் குரூப் 4 தேர்வு ஜூலை 24 ஆம் தேதி நடைபெறும் என அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை நடந்து வருகிறது.. தேர்வு எழுத விரும்பும் விண்ணப்பதாரர்கள் மார்ச் 30 ஆம் தேதி முதல் ஏப்ரல் 28 ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குரூப் 4 பதவியில் கிராம நிர்வாக அலுவலர்(விஏஓ) 274 இடங்கள், ஜூனியர் அசிஸ்டெண்ட் 3,681, தட்டச்சர் 2108, சுருக்கெழுத்து தட்டச்சர்(கிரேடு 3) 1024 என 7138 இடங்கள் நிரப்பப்படுகிறது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு DA நிலுவைத் தொகை கிடைப்பதில் சிக்கல்? காரணம் இதுதான்!

மேலும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் ஜூனியர் அசிஸ்டெண்ட், பில் கலெக்டர், சுருக்கெழுத்து தட்டச்சர் பதவியில் 163 இடங்கள் நிரப்பப்படுகிறது. இந்நிலையில், TNPSC குரூப் 4 தேர்வுக்கு இதுவரையில் சுமார் 13 லட்சம் பேர் விண்ணப்பித்திருப்பதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்னும் இரண்டு நாட்களே உள்ளது. எனவே, தேர்வு எழுத விரும்பும் விண்ணப்பதாரர்கள் கடைசி தேதிக்கு முன்னரே ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஜூலை 24-ம் தேதி காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை குரூப் 4 தேர்வு நடைபெறும். 300 மதிப்பெண்களுக்கு நடைபெறும் இந்த தேர்வின் முடிவுகள் அக்டோபர் மாதம் வெளியிட டிஎன்பிஎஸ்சி முடிவு செய்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!