பாலிடெக்னிக் அரியர் தேர்வுக்கு விண்ணப்ப பதிவு – அக்.21 கடைசி நாள்! தவறினால் அபராதம்!

0
பாலிடெக்னிக் அரியர் தேர்வுக்கு விண்ணப்ப பதிவு - அக்.21 கடைசி நாள்! தவறினால் அபராதம்!
பாலிடெக்னிக் அரியர் தேர்வுக்கு விண்ணப்ப பதிவு - அக்.21 கடைசி நாள்! தவறினால் அபராதம்!
பாலிடெக்னிக் அரியர் தேர்வுக்கு விண்ணப்ப பதிவு – அக்.21 கடைசி நாள்! தவறினால் அபராதம்!

தமிழகத்தில் பாலிடெக்னிக் கல்லூரியில் அரியர் தேர்வு எழுத விண்ணப்பித்து கட்டணம் செலுத்த கடைசி தேதி அக்டோபர் 21 என்று பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் செய்திக்குறிப்பில் வெளியிட்டுள்ளார்.

அரியர் தேர்வு:

தமிழகத்தில் தொழில் சார்ந்த கல்விகளை அளிக்கும் கல்லூரி தான் பாலிடெக்னிக் கல்லூரி. இங்கு தொழில் சார்ந்த பல்வேறு நுணுக்கங்கள் கற்று தரப்படும். இத்தகைய கல்லூரியில் கட்டிடப் பொறியியல் பட்டயப் படிப்பு (Civil), மின் மற்றும் மின்னணுவியல் பொறியியல் பட்டையப் படிப்பு (EEE), இயந்திரப் பொறியியல் பட்டையப் படிப்பு (Mechanical), கணினி பொறியியல் பட்டையப் படிப்பு (CSE), பலபடிச் சேர்ம தொழில்நுட்பத்தில் பட்டையப் படிப்பு(Chemical Engg), Automobile Engg, ECE, EE போன்ற படிப்புகள் உள்ளடங்கியுள்ளது. இத்தகைய படிப்பில் ஏதேனும் ஒன்றில் சேர்வதற்கு தகுதி 10 ஆம் வகுப்பில் 40% தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானதாகும்.

ஆயுத பூஜைக்கு வெளியூர் செல்லும் சென்னைவாசிகள் கவனத்திற்கு – தற்காலிக வழித்தடங்கள் அறிவிப்பு!

இத்தகைய கல்லூரியில் படிப்பதற்கு ஆண், பெண் இருபாலரும் தற்போது மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். ஏனெனில் இத்தகைய படிப்பில் ஏதேனும் ஒன்றை படித்து தேர்ந்தவுடன் வேலை பார்க்கும் தகுதி அவர்களுக்கு வந்து விடுகிறது. அதனாலே அந்த கல்லூரிகளில் சேர மாணவர் ஆர்வம் காட்டி வருகின்றனர். செய்முறை அடிப்படையில் கற்றல் இருந்தாலும் கடைசியில் எழுத்து தேர்வும் நடத்தப்படுகிறது. இத்தகைய எழுத்துத் தேர்வில் அதிக அளவிலான மாணவர்கள் தேர்ச்சி பெறாமல் இருந்து வருகின்றனர். அதனை கருத்தில் கொண்டு தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கும் விதமாக தற்போது சென்னை தொழில்நுட்ப கல்வி இயக்ககம் சுற்றறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது.

சபரிமலை செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு – ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு ஆரம்பம்!

அந்த சுற்றறிக்கையின் படி 1984 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை பாலிடெக்னிக் கல்லூரியில் பயின்று அரியர் வைத்திருப்பவர்கள் தேர்வுக்கு விண்ணப்பித்து தேர்வு எழுத அனுமதி வழங்கியுள்ளது. அத்தகைய தேர்விற்கு விண்ணப்பித்து கட்டணம் செலுத்துவதற்கு அக்.21ம் தேதி கடைசி என்றும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அவ்வாறு கட்டணம் செலுத்தத் தவறினால் அபராதம் 150 ரூபாய் சேர்த்து அக்.23ம் தேதிக்குள் செலுத்த வேண்டும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!