தமிழக அரசு வேலைவாய்ப்பு அலுவலக பதிவு – ஆன்லைன் மூலம் செய்ய எளிய வழிகள்!

0
தமிழக அரசு வேலைவாய்ப்பு அலுவலக பதிவு - ஆன்லைன் மூலம் செய்ய எளிய வழிகள்!
தமிழக அரசு வேலைவாய்ப்பு அலுவலக பதிவு - ஆன்லைன் மூலம் செய்ய எளிய !
தமிழக அரசு வேலைவாய்ப்பு அலுவலக பதிவு – ஆன்லைன் மூலம் செய்ய எளிய வழிகள்!

தமிழகத்தில் உயர்நிலைக்கல்வி மற்றும் மேல்நிலைக்கல்வி தேர்ச்சி பெற்ற பதிவுகளை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யும் பணியை அந்தந்த பள்ளிகளே மேற்கொள்ளும். தற்போது கைவிடுவதாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அறிவித்துள்ளது. அதனால் பதிய விருப்பமுள்ளவர்கள் ஆன்லைன் வாயிலாகவும் பதியலாம். அதற்கான வழிமுறைகள் குறித்து இப்பதிவின் காண்போம்.

வேலைவாய்ப்பு பதிவு:

தமிழகத்தில் அரசு பணிக்கு செல்ல விரும்புவோர் அந்தந்த மாவட்ட அரசு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தங்கள் கல்வி தகுதிகளை பதிவு செய்வது கட்டாயம். இதன் மூலம் எதிர்காலத்தில் வேலை வாய்ப்புகள் வழங்கப்படுகிறது. மேலும் பதிவு செய்த வேலை வாய்ப்பை ஒவ்வொரு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிப்பு செய்வது அவசியமாகும். மேலும் தங்கள் கல்வி தகுதிகளையும் பதிவு செய்ய வேண்டும். தற்போது நிலவி வரும் பெருந்தொற்று காலத்தில் ஏராளமானோர் வேலைகளை இழந்து தவித்து வருகின்றனர். இவர்களுக்கு உதவும் வகையில் அரசு சார்பாக வேலை வாய்ப்பகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் ஆகியும் வேலை கிடைக்காதவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

இந்த நிலையில் உயர்நிலைக்கல்வி மற்றும் மேல்நிலைக்கல்வி தேர்ச்சி பெற்ற மாணவர்களின் வேலைவாய்ப்பு பதிவுகளை பள்ளி வளாகத்தில் இனி மேற்கொள்ளப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் அந்தந்த மாவட்டத்தில் இருக்கும் வேலைவாய்ப்பு அலுவலங்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்களுடன் நேரில் வருகை தந்து வேலைவாய்ப்பு பதிவுகள் மேற்கொள்ளவும் அல்லது www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதளம் வாயிலாகவும் பதிவுகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சமீபத்திய தகவலின் படி வேலைவாய்ப்பு அலுவகத்தில் 18 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவர்களை எண்ணிக்கை மட்டுமே 16,73,803 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – அட்டவணை வெளியீடு!

தற்போது ஆன்லைன் மூலம் வேலைவாய்ப்பு பதிவு செய்ய நினைப்பவர்கள் முதலில் tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும். அடுத்ததாக வரும் முகப்புப் பக்கத்தில், விண்ணப்பதாரர் தனது பெயர், இருப்பிடம், பாலினம், பிறந்த தேதி, ஆதார் எண், தந்தை பெயர், மின்னஞ்சல் முகவரி, பதிவு எண், கடவுச் சொல், நிரந்தர முகவரி ஆவணங்கள், தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும். கல்வித் தகுதி, தனிமனித விவரம், திறன் தொடர்பான விவரங்களை உள்ளீட்டு செய்ய வேண்டும். மனுதாரரர்கள் தவறான விவரங்களை அளித்தால் உங்களின் பதிவு ரத்து செய்யப்படும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!