ஜூலை 1 முதல் ஆன்லைன் வகுப்புகள் மீண்டும் தொடக்கம் – மாநில அரசு அறிவிப்பு!

0
ஜூலை 1 முதல் ஆன்லைன் வகுப்புகள் மீண்டும் தொடக்கம் - மாநில அரசு அறிவிப்பு!
ஜூலை 1 முதல் ஆன்லைன் வகுப்புகள் மீண்டும் தொடக்கம் - மாநில அரசு அறிவிப்பு!
ஜூலை 1 முதல் ஆன்லைன் வகுப்புகள் மீண்டும் தொடக்கம் – மாநில அரசு அறிவிப்பு!

உத்தரகண்ட் மாநிலத்தில் நாளை (01.07.2021) முதல் கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கவுள்ளது.

ஆன்லைன் வகுப்புகள் :

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பள்ளிகள் ஓராண்டிற்கும் மேலாக மூடப்பட்டுள்ளது. தற்போது புதிய கல்வியாண்டு தொடங்கியுள்ளது. ஆனால் கொரோனா இரண்டாம் அலை வேகமெடுத்த காரணத்தால் இந்த வருடமும் பள்ளிகள் திறப்பு கேள்விக் குறியாக உள்ளது. கடந்த ஆண்டு முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பாடங்கள் ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகிறது. மேலும் மற்றொரு புறம் கொரோனா தடுப்பு பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

ஜூலை 1 முதல் 8 மாவட்டங்களில் ஊரடங்கு தளர்வுகள் அமல் – எவற்றுக்கெல்லாம் அனுமதி!

ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்படுவதால் அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு தேர்ச்சி அறிவிக்கப்பட்டு மாணவர்கள் அடுத்தடுத்த வகுப்புகளுக்கு செல்கின்றனர். மேலும் 10, 12 ஆகிய வகுப்புகளின் பொதுத்தேர்வுகளும் மாணவர்களின் நலன் கருதி ரத்து செய்யப்பட்டது. மதிப்பீட்டு முறையில் மதிப்பெண்கள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 30க்குள் இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் 12ம் வகுப்பு மதிப்பெண்களை வெளியிட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

CBSE 10ம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண்கள் பதிவேற்றம் – இன்று கடைசி நாள்!

மேலும் ஆன்லைன் வகுப்புகளுக்கு மே மாதம் முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. பிறகு ஜூன் மாதம் முதல் ஆன்லைன் வகுப்புகளை தொடங்கியது. மற்ற மாநிலங்களை தொடர்ந்து தற்போது உத்தரகண்ட் மாநிலத்தில் நாளை (01.07.2021) முதல் கோடை விடுமுறைக்கு பிறகு மீண்டும் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கவுள்ளது. கொரோனா தொற்று பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேரடி வகுப்புகளுக்கு மாற்றாக இணைய வகுப்புகள் நடைபெறும் என மாநில பள்ளிக் கல்வித்துறை இணைச் செயலாளர் ஜே.எல்.சர்மா தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!