TNPSC குரூப் 4 & VAO தேர்வர்கள் கவனத்திற்கு – ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள் இதோ!

0
TNPSC குரூப் 4 & VAO தேர்வர்கள் கவனத்திற்கு - ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள் இதோ!
TNPSC குரூப் 4 & VAO தேர்வர்கள் கவனத்திற்கு - ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள் இதோ!
TNPSC குரூப் 4 & VAO தேர்வர்கள் கவனத்திற்கு – ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள் இதோ!

TNPSC தேர்வாணையம் இந்த ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணையை அண்மையில் வெளியிட்டது. அதன்படி குரூப் 4 தேர்வு வருகிற ஜூலை மாதத்தில் 24ம் தேதி அன்று நடைபெற உள்ளது. தற்போது குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகளை பற்றி விரிவாக பார்ப்போம். இதில் 10 படிநிலைகள் உள்ளன. இதனை பற்றி விரிவாக பார்ப்போம்.

குரூப் 4 தேர்வு

தமிழகத்தில் அரசு துறைகளில் காலிப்பணியிடங்களை TNPSC தேர்வாணையத்தால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெறுபவர்கள் நியமிக்கப்படுகிறார்கள். இதில் அரசு பதவிகளின் அடிப்படையில் குரூப் 1, குரூப் 2, குரூப் 3 மற்றும் குரூப் 4 உள்ளிட்ட பல்வேறு வகையான தேர்வுகள் நடைபெறுகிறது. இத்தேர்வுகளில் தேர்ச்சி பெறுபவர்கள் அரசின் துறைகளில் அவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் அதற்குரிய பதவிகளில் நியமிக்கப்படுகிறார்கள். கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து TNPSC இந்த ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணையை அண்மையில் வெளியிட்டது. இதையடுத்து குரூப் 2 தேர்வு வருகிற மே 21ம் தேதி அன்று நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 3ம் தேதியன்று முழு ஊரடங்கு உத்தரவு அமல்? அதிகாரிகள் விளக்கம்!

அத்துடன் குரூப் 4 தேர்வு வருகிற ஜூலை மாதத்தில் 24ம் தேதி அன்று நடைபெறும் என்று தேர்வு வாரிய தலைவர் அண்மையில் அறிவித்தார். மேலும் இவர் இத்தேர்வின் மூலமாக 7,382 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதில் 81 பணியிடங்கள் விளையாட்டு கோட்டா மூலமாகவும், 274 பணியிடங்கள் கிராம நிர்வாக அதிகாரி பணியிடங்களுக்கு நிரப்ப உள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் இத்தேர்வு ஒரே ஒரு எழுத்து தேர்வை மட்டும் கொண்டதால் இத்தேர்வுக்கு லட்சக்கணக்கான நபர்கள் விண்ணப்பிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது குரூப் 4 தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகளை பற்றி விரிவாக பார்ப்போம்.

1. முதலாவதாக https://www.tnpsc.gov.in/Home.aspx என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும். இப்போது தோன்றும் பக்கத்தில் குரூப் 4 தேர்வு அருகில் அப்ளை நவ் என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

2. இதில் ஏற்கனவே பதிவு செய்தவர், தங்களின் பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட்டு உள்ளே நுழைய வேண்டும்.

3. இந்த நிரந்தர பதிவு வைத்திருக்காதவர்கள், முகப்பு பக்கத்துக்குச் சென்று நிரந்தப் பதிவு விவரங்கள் என்பதை கிளக் செய்து, பின்னர் தோன்றும் புதிய பதிவு விழைவோர் என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

4. இதில் தங்களின் அடிப்படை விவரங்களை கொடுக்க வேண்டும். பதிவு செய்த பின்பு, தேர்வுக்கு அப்ளை செய்ய வேண்டிய பக்கத்திற்கு சென்று, தங்களின் பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட வேண்டும்.

5. தங்களின் கணக்கில் உள்நுழைந்ததும் குரூப் 4 க்கு விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யவும் என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

6. இப்போது தோன்றும் பக்கத்தில் விண்ணப்ப விவரங்கள் என்ற பிரிவில் மொத்தம் 10 படிநிலைகள் கொடுக்கப்பட்டிருக்கும். அதாவது விண்ணப்ப விவரங்கள், தகவல்தொடர்பு விவரங்கள், கல்வித் தகுதி விவரங்கள் உள்ளிட்டவை இடம்பெற்றிருக்கும்

7. இதில் தங்களின் விவரங்களை சரியாக நிரப்ப வேண்டும். இதில் உள்ள அனைத்து படிநிலைகளையும் பூர்த்தி செய்த பிறகு விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

8. இறுதியாக இந்த விண்ணப்பத்தை நீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது நகல் எடுத்து வைத்துக் கொள்ளலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!