ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தின் ‘மேரா ரேஷன்’ செயலி – அறிந்து கொள்ள வேண்டிய அம்சங்கள்!

0
ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தின் 'மேரா ரேஷன்' செயலி - அறிந்து கொள்ள வேண்டிய அம்சங்கள்!
ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தின் 'மேரா ரேஷன்' செயலி - அறிந்து கொள்ள வேண்டிய அம்சங்கள்!
ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தின் ‘மேரா ரேஷன்’ செயலி – அறிந்து கொள்ள வேண்டிய அம்சங்கள்!

ஒரு நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள மேரா ரேஷன் செயலியில் மக்களின் பயன்பாட்டிற்காக பல அம்சங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த செயலியின் பதிவிறக்கம், பயன்பாடு மற்றும் அம்சங்கள் பற்றிய விரிவான தகவல்கள் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

‘மேரா ரேஷன்’ செயலி:

ஒரு நாடு ஒரே ரேஷன் கார்டு (ONORC) திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. புதிய இடத்திற்கு இடம் பெயரும் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை தக்கவைக்க உதவும், இந்த முன்முயற்சி அரசுக்கு சொந்தமான ரேஷன் சேவைகளை எளிதாக பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ரேஷன் கார்டுதாரர்கள் தங்கள் வசதிக்கேற்ப ஒரே ரேஷன் கார்டை பயன்படுத்த உதவி செய்கிறது. இந்த சேவையைப் பெறுவதற்கான ஆப்ஸ் கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள ஆண்ட்ராய்டு போன்களில் கிடைக்கிறது. ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் பிடிஎஸ் எனப்படும் பொது விநியோக முறை மூலம் உணவு தானியங்களைப் பெறுகிறார்கள்.

2022 ஆம் ஆண்டில் 24 நாட்கள் பள்ளிகளுக்கு பொது விடுமுறை – மாநில அரசு அறிவிப்பு!

ஆனால் அவர்கள் வெவ்வேறு மாநிலங்களுக்குச் செல்லும் போது, PDS நன்மைகளைப் பெறுவதில் சில பெரிய சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். இப்போது மேரா ரேஷன் செயலி மூலம் அந்த வகையான பிரச்சனை தீர்க்கப்படும், பயனாளிகள் நாடு முழுவதும் ரேஷன் கார்டு சேவைகளைப் பெற முடியும். பயனர்கள் தங்கள் விரல் நுனியில் அனைத்து நன்மைகளையும் பெறும் வகையில் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அவர்களின் தற்போதைய பரிவர்த்தனைகள் மற்றும் அவர்களின் உரிமையின் விவரங்களை அவர்கள் சரிபார்க்கலாம். ஆரம்பத்தில், இந்த செயலியில் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மட்டுமே இருந்தது, ஆனால் இப்போது 10 மொழிகள் சேர்க்கப்பட்டுள்ளது.

மேரா ரேஷன் ஆப் பதிவிறக்கம் செய்யும் படிகள்:
  • முதலில் Google Play Store க்குச் செல்ல வேண்டும்.
  • அங்கு search பகுதியை கிளிக் செய்து, மேரா ரேஷன் ஆப் என தட்டச்சு செய்யவும்.
  • மத்திய Aepds குழு பதிவேற்றிய install பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.
  • மேரா ரேஷன் பயன்பாட்டின் அம்சங்கள்:
  • பதிவு: பயனர்கள் தங்கள் ரேஷன் கார்டு எண்ணை சமர்ப்பிப்பதன் மூலம் செயலியில் தங்களை பதிவு செய்து கொள்ளலாம்.
  • அருகிலுள்ள ரேஷன் கடைகள்: பயனர்கள், தங்கள் இருப்பிடத்தை தொலைபேசியில் இயக்குவதன் மூலம், அவர்களுக்கு அருகில் அமைந்துள்ள ரேஷன் கடைகளைப் பற்றி அறிந்து கொள்ளலாம். ஒரு நாடு ஒரே ரேஷன் கார்டு வசதி உள்ள மாநிலங்களை பயனர்கள் இதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.

தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகளை விதிக்க மத்திய அரசிடம் அனுமதி – அமைச்சர் விளக்கம்!

  • எனது பரிவர்த்தனைகள்: ரேஷன் கார்டு எண்ணை உள்ளிடுவதன் மூலம், பயனாளிகள் பரிவர்த்தனை விவரங்களையும் பெறலாம்.
  • தகுதிகள்: ஆதார் எண் அல்லது ரேஷன் கார்டு எண்ணைப் பயன்படுத்தி கார்டு தாரரின் தகுதியை சரிபார்க்க உதவுகிறது.
  • ஆதார் பதிவு: ஆதார் எண் அல்லது ரேஷன் கார்டு எண்ணை வழங்கும் அதே முறையில் ஆதார் பதிவையும் செய்து கொள்ளலாம்.
  • உள்நுழைவு: பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல் மூலம் நீங்கள் வசிக்கும் தற்போதைய மாநிலத்தைச் சேர்ந்த அதிகாரிகளால் உள்நுழைவு செய்யப்படுகிறது

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!