அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம்!

0
அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு - ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம்!
அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு - ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம்!
அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம்!

மத்திய அரசின் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய செயலியான மேரா ரேஷன் ஆப் பற்றிய முழு தகவல்களையும், அதனால் பயனர்களுக்கான பயன்களையும் குறித்து இந்த பதிவில் காணலாம்.

மேரா ரேஷன் செயலி:

மத்திய அரசு நாட்டின் விளிம்பு நிலை மக்களுக்கான வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் அறிமுகப்படுத்தியுள்ள திட்டம் தான் ஒரு நாடு ஒரே ரேஷன் கார்டு (ONORC) திட்டம். இந்த திட்டம் மூலம் நாட்டில் ஒரு மூலையில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்லும் போது கூட மக்கள் தங்களின் அத்தியாவசிய தேவைகளுக்கான பொருட்களை அரசின் மலிவு விலை ரேஷன் கடைகள் மூலம் எளிதாக பெற்றுக் கொள்ளலாம். அரசின் இந்த முயற்சியினால் மக்கள் எளிதாக ரேஷன் சேவைகளை பெற்றுக் கொள்ளலாம். இந்த திட்டத்திற்கு மாநில அரசு மூலம் வழங்கியுள்ள ஸ்மார்ட் கார்டு மட்டுமே போதுமானது.

மத்திய அரசு வழங்கும் ரூ.2000 – பிரதமரின் கிசான் திட்டம்! முக்கிய அறிவிப்பு வெளியீடு!

இந்தச் சேவையைப் பெறுவதற்கான ஆப்ஸ் கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள ஆண்ட்ராய்டு போன்களில் உள்ளது. ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் பிடிஎஸ் எனப்படும் பொது விநியோக முறை மூலம் உணவு தானியங்களைப் பெற முடியும். முன்னதாக இந்த முறையில் பயனர்கள் தங்களுக்கு என்று ஒதுக்கப்பட்டுள்ள ரேஷன் கடைகளில் மட்டுமே பொருட்களை பெற முடியும். இப்போது மேரா ரேஷன் செயலி மூலம் பயனாளிகள் நாடு முழுவதும் உள்ள எந்த பகுதியிலும் ரேஷன் கார்டு சேவைகளை பெற முடியும். இந்த மேரா ரேஷன் செயலியை Google Play Storeல் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். முன்னதாக ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே இருந்த இந்த செயலி தற்போது மேலும் 10 மொழிகளில் உள்ளது.

செயலியின் பயன்பாடுகள்:

  • நமது ரேஷன் கார்டு எண்ணை சமர்பிப்பதன் மூலம் பயனர்கள் தங்கள் விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம்.
  • பயனர்கள், தங்கள் இருப்பிடத்தை தொலைபேசியில் இருந்து இயக்குவதன் மூலம் அவர்களுக்கு அருகில் அமைந்துள்ள ரேஷன் கடைகளைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.
  • ஒரு நாடு ஒரே ரேஷன் கார்டு வசதி உள்ள மாநிலங்களின் பட்டியலை அறிந்து கொள்ளலாம்.

தமிழக பள்ளி மாணவர்களுக்கு தினசரி வகுப்புகள் ரத்து – ஓமிக்ரான் எதிரொலி!

  • ரேஷன் கார்டு எண்ணை பதிவு செய்வதன் மூலம் பயனாளிகள் தங்கள் பரிவர்த்தனை விவரங்களையும் பெறலாம்.
  • ஆதார் எண் அல்லது ரேஷன் கார்டு எண்ணைப் பயன்படுத்தி கார்டுதாரரின் பொருட்களின் நிர்ணயிக்கப்பட்ட அளவினை அறிந்து கொள்ளலாம்.
  • ஆதார் எண் அல்லது ரேஷன் கார்டு எண்ணை வழங்கும் முறையினால் ஆதாரையும் பதிவு செய்து கொள்ளலாம்.
  • பயனாளி தனது மொபைல் எண் மற்றும் கார்டு எண்ணைப் பதிவு செய்து சேவைகளை பற்றிய தங்களின் கருத்துக்களை பதிவு செய்து கொள்ளலாம்.
  • பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல் மூலம் நீங்கள் வசிக்கும் தற்போதைய மாநிலத்தைச் சேர்ந்த குறிப்பிட்ட அதிகாரிகள் மூலம் திட்டத்தில் இணைந்து கொள்ளலாம்.

    Velaivaippu Seithigal 2021

    To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
    To Join => Whatsapp கிளிக் செய்யவும்
    To Join => Facebookகிளக் செய்யவும்
    To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!