மத்திய அரசு வழங்கும் ரூ.2000 – பிரதமரின் கிசான் திட்டம்! முக்கிய அறிவிப்பு வெளியீடு!

0
மத்திய அரசு வழங்கும் ரூ.2000 - பிரதமரின் கிசான் திட்டம்! முக்கிய அறிவிப்பு வெளியீடு!
மத்திய அரசு வழங்கும் ரூ.2000 - பிரதமரின் கிசான் திட்டம்! முக்கிய அறிவிப்பு வெளியீடு!
மத்திய அரசு வழங்கும் ரூ.2000 – பிரதமரின் கிசான் திட்டம்! முக்கிய அறிவிப்பு வெளியீடு!

விவசாயிகளுக்கு உதவி புரியும் வகையில் பிரதமர் கிசான் யோஜனா என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இத்திட்டத்தின் அடுத்த தவணை கூடிய விரைவில் வெளியிடப்படும் என்றும் இது குறித்து மேலும் சில தகவல்கள் வெளியாகியுள்ளது.

PM கிசான் யோஜனா திட்டம்:

இந்திய நாட்டில் விவசாயிகளுக்கு நன்மை தரும் வகையில் பல்வேறு திட்டங்களை அரசு அறிவித்து வருகிறது. அதில் குறிப்பாக சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் பிரதமர் கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டம் அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டம் மூலமாக 6,000 ரூபாய் நிதியுதவி இவர்களுக்கு வழங்கப்படுகிறது. மேலும் இந்த நிதியுதவியானது அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது. இந்த நிதியுதவி தொகையானது ஒவ்வொரு ஆண்டுக்கும் மூன்று தவணைகளாக வழங்கப்படும்.

தமிழகத்தில் புதன்கிழமை (டிச.29) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

ஒவ்வொரு தவணையின் போது தலா ரூ.2000 வரை விவசாயிகள் வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் ஆதார் விவரங்களும் இணைக்கப்பட்டுள்ளதால் தரவுத்தளத்தில் அவர்களை பற்றிய அனைத்து தகவல்களும் இருக்கும். இத்திட்டத்தில் உள்ளவர்கள் கட்டாயமான முறையில் இ-கேஒய்சி செய்து இருக்க வேண்டும் என்று புதிய அறிவிப்பை வெளியிட்டது. இந்த இ-கேஒய்சி-யை செய்யாதவர்களுக்கு ஜனவரி 1 ஆம் தேதி வங்கி கணக்கில் செலுத்த உள்ள ரூ.2000 வழங்கப்பட மாட்டாது என்று முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

மேலும் பிரதமர் கிசான் சம்மன் நிதியின் கீழ் வழங்கும் நிதி தொகை தங்கள் வங்கி கணக்கில் வருமா இல்லையா என்று சரிபார்க்க கீழ் உள்ள வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

  • முதலாவதாக https://pmkisan.gov.in என்ற PM Kisan Yojana-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
  • பின்பு அதில் விவசாயிகள் கார்னர் (Farmer’s Corner section) என்பதில் பயனாளிகள் பட்டியல் விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும்.
  • தற்போது கீழ்தோன்றும் பட்டியலில் இருந்து தங்கள் மாநிலம், மாவட்டம், துணை மாவட்டம், தொகுதி மற்றும் கிராமத்தை போன்றவற்றை தேர்ந்தெடுக்க வேண்டும்
  • அடுத்ததாக ‘Get Report’ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
  • இறுதியாக பயனாளிகளின் முழுமையான பட்டியல் திரையில் தோன்றும் அதில் தங்கள் பெயர் உள்ளதா என்பதை சரிபார்த்து கொள்ளலாம்.

அதே போல் பிரதமர் கிசான் சம்மன் நிதியின் கீழ் வழங்கும் தவணை நிலைகளை பற்றி அறிந்து கொள்ள கீழ் உள்ள வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

  • முதலாவதாக PM Kisanயின் இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
  • அடுத்ததாக வலதுபுறத்தில் உள்ள விவசாயிகள் கார்னரைக் கிளிக் செய்து அதில் பயனாளி நிலை (Beneficiary status) என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
  • இப்பொழுது புதிய பக்கம் திறக்கப்படும். அதில் தங்களின் ஆதார் எண், மொபைல் எண்ணை போன்றவற்றை உள்ளிட வேண்டும்.
  • இறுதியாக தங்களின் தவணை நிலை பற்றிய முழுமையான தகவலை பெற முடியும்.

    Velaivaippu Seithigal 2021

    To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
    To Join => Whatsapp கிளிக் செய்யவும்
    To Join => Facebookகிளக் செய்யவும்
    To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!