விஜய் டிவி ‘ராஜா ராணி 2’ சீரியலை விட்டு விலகிய ஆலியாவின் ஒருநாள் சம்பளம் – ரசிகர்கள் ஷாக்!

0
விஜய் டிவி 'ராஜா ராணி 2' சீரியலை விட்டு விலகிய ஆலியாவின் ஒருநாள் சம்பளம் - ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவி 'ராஜா ராணி 2' சீரியலை விட்டு விலகிய ஆலியாவின் ஒருநாள் சம்பளம் - ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவி ‘ராஜா ராணி 2’ சீரியலை விட்டு விலகிய ஆலியாவின் ஒருநாள் சம்பளம் – ரசிகர்கள் ஷாக்!

விஜய் டிவியில் பிரமாண்டமாக ஒளிபரப்பாகி வரும் சீரியலில் ஒன்று ராஜா ராணி அதில் சந்தியா காதிபத்திரத்தில் நடித்து வந்த ஆலியா தற்போது இரண்டாவது குழந்தை பிறக்க உள்ள காரணத்தினால் சீரியலை விட்டு விலகியிருந்தார். அவர் ஒரு நாள் சம்பளமாக ராஜா ராணி சீரியலில் வாங்கியதை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆலியாவின் ஒரு நாள் சம்பளம்:

விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக மக்களிடத்தில் ரீச் பெற்று முடிவடைந்த ராஜா ராணி சீரியலை தொடர்ந்து ராஜா ராணி 2 ஆரம்பமாகியது. இரண்டிலும் ஹீரோயினாக நடித்த ஆலியா முதல் சீசன்-ல் செம்பருத்தியாக நடித்து, இரண்டாவது சீசன்-ல் சந்தியாவாக நடித்து வந்தார். இவர் ஆரம்பத்தில் மாடலாக தனது வாழ்க்கைப் பயணத்தை தொடங்கி ஆர் ஜே வாக மாறியவர். மேலும் இவர் நடனம் ஆடுவதில் வல்லவர் என்பதால் முதலில் கலைஞர் தொலைக்காட்சியில் ‘மானாட மயிலாட’ ஷோவில் கலந்து கொண்டு பிறகு ஒரு நடன பயிற்றுவிப்பாளராகவும் பணிபுரிந்துள்ளார்.

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியல் மீது போலீசில் புகார் – ரசிகர்கள் அதிர்ச்சி! காரணம் என்ன தெரியுமா?

அதன்பிறகு விஜய் டிவியில் ராஜா ராணி சீரியலில் நடித்து அவருக்கு ஜோடியாக நடித்த சஞ்சீவ் அவர்களையே காதலித்து திருமணமும் செய்து கொண்டார். இவர்களுக்கு அழகான ஐலா என்ற பெண் குழந்தையும் உள்ளது. முதல் குழந்தை கர்ப்பமாக இருந்த காலத்தில் சீரியலில் நடிப்பதில் இருந்து விலகிய ஆலியா குழந்தை பிறந்து ஒரு வருடம் கழித்து மீண்டும் உருவாகிய ராஜா ராணி 2 ல் நடிக்க ஆரம்பித்தார். தற்போது இரண்டாவது குழந்தை கர்ப்பமானதை தொடர்ந்து இவர் ஆரம்பத்திலே சீரியலை விட்டு விலகி விடுவார் என பல தரப்பினர் நினைத்த போதிலும், ஆலியா வயிற்றில் வளரும் குழந்தையுடன் கடந்த வாரம் வரையிலும் சந்தியா கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

இதை தொடர்ந்து சமீபத்தில் சீரியலை விட்டு விலகி உள்ள ஆலியா இடத்தை ரீப்ளேஸ் செய்யும் விதமாக மாடல் நடிகை ரியா அறிமுகமாகியுள்ளார். இந்நிலையில் தற்போது ராஜா ராணி 2 சீரியலில் ஆலியாவுக்கு ஒரு நாள் சம்பளமாக 13,000 ரூபாயும், அவருடன் ஜோடியாக நடித்து வரும் சித்து அவர்களுக்கு ஒரு நாள் 10,000 ரூபாயும் வழங்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், பிற கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு அதைவிட குறைவான சம்பளமே வழங்கப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!