மீண்டும் கட்டணத்தை உயர்த்திய ஆம்னி பேருந்துகள் – பொதுமக்கள் அவதி!

0

விடுமுறை அறிவிப்புகள் வெளியானதும் ஆம்னி பஸ் உரிமையாளர்களுக்கு குதூகலமாகி உடனடியாக பேருந்து கட்டணத்தை பல மடங்கு உயர்த்தி விடுகின்றனர். அந்த வகையில் தற்போது ஏப்ரல் 19ஆம் தேதி வெள்ளிக்கிழமை தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பொது விடுமுறை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சனி மற்றும் ஞாயிறு வார இறுதி நாட்கள் என்று தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை வருகின்றது. மேலும் தற்போது பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை தொடங்கியுள்ளதால் அதிகப்படியான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு ஆயத்தமாகி வருகின்றனர்.

IOCL நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கு வேலை – விரைந்து விண்ணப்பியுங்கள்!

இதன் காரணமாக தமிழகத்தில் தனியார் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் பல மடங்கு உயர்ந்த தொடங்கிவிட்டது. குறிப்பாக சென்னையில் இருந்து நெல்லைக்கு ரூபாய் 3000 வரையிலும், கோவை மற்றும் மதுரைக்கு ரூபாய் 2000 வரையிலும், திருச்சிக்கு ரூபாய் 1500 முதல் 2000 ரூபாய் வரையிலும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது வழக்கத்தை விட இரண்டு மூன்று மடங்கு அதிகமாக உள்ளதாக பொதுமக்கள் புகார் அளித்து வருகின்றனர்.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!