அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்? ஜார்கண்ட் முதல்வர் அறிவிப்பு!

0
அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்? ஜார்கண்ட் முதல்வர் அறிவிப்பு!
அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்? ஜார்கண்ட் முதல்வர் அறிவிப்பு!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் அரசு ஊழியர்கள் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்த நிலையில் அம்மாநில முதல்வர் பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் கொண்டு வரப்படும் என்று தெரிவித்துள்ளார். இதனால் ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பழைய ஓய்வூதிய திட்டம்:

இந்தியாவில் 2004ம் ஆண்டுக்கு பிறகு அரசு பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கு அரசு புதிய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த புதிய ஓய்வூதிய திட்டத்திற்கு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்தியாவின் அனைத்து மாநில அரசு ஊழியர்களும் தொடர்ந்து பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று போராடி வரும் நிலையில் ஜார்கண்ட் மாநில முதல்வர் மகிழ்ச்சி அளிக்கும் செய்தியை வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் நாளை பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை – முக்கிய அறிவிப்பு!

அதாவது அரசு ஊழியர்களுக்கு அக்டோபர் 1 முதல் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தைக் கொண்டு வருவதாக ஜார்கண்ட் அரசு அறிவித்துள்ளது. இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரப்பட்டால் அம்மாநிலத்தில் சுமார் 1.25 லட்சம் ஊழியர்கள் பயன் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது மாநில அரசு ஊழியர்கள் உரிய விதிகளை பின்பற்றி பிரமாண பத்திரம் தாக்கல் செய்தால் அந்த ஊழியர் பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு மாற அனுமதிக்கப்படுவார்கள் என்று அரசு தெரிவித்துள்ளது.

Exams Daily Mobile App Download

ஏற்கனவே ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் மாநிலத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து தற்போது ஜார்கண்டிலும் OPS திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த நிலையில் மற்ற மாநில மற்றும் மத்திய அரசு ஊழியர்களும் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். அதனால் விரைவில் பழைய ஓய்வூதிய திட்டம் நாடு முழுவதும் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!