Ola S1 Pro Electric ஸ்கூட்டரின் விலை திடீர் உயர்வு – வாடிக்கையாளர்கள் அதிருப்தி!

0
Ola S1 Pro Electric ஸ்கூட்டரின் விலை திடீர் உயர்வு - வாடிக்கையாளர்கள் அதிருப்தி!
Ola S1 Pro Electric ஸ்கூட்டரின் விலை திடீர் உயர்வு - வாடிக்கையாளர்கள் அதிருப்தி!
Ola S1 Pro Electric ஸ்கூட்டரின் விலை திடீர் உயர்வு – வாடிக்கையாளர்கள் அதிருப்தி!

கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் எஸ்1 ப்ரோ ஸ்கூட்டரின் விலை தற்போதுள்ள ரூ.1.29 லட்சத்தை விட உயர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

விலை உயர்வு

இந்தியாவில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதியன்று புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மக்களிடம் இருந்து வரவேற்புகளை பெற்று வந்தது. இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான விற்பனை துவங்கிய முதல் நாளிலேயே பல நூறு கோடி கணக்கில் லாபம் ஈட்டி இருந்தது. அந்த வகையில் ஓலா நிறுவனத்தின் எஸ் 1 மற்றும் எஸ் 1 புரோ ஸ்கூட்டர்கள் 1 லட்சம் என்ற அளவில் இதுவரை விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது திடீரென Ola S1 Pro ஸ்கூட்டரின் விலை உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் அமலாகும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் – தொழில் நிறுவனங்கள் பாதிப்பு!

அதாவது, ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் அதன் S1 Pro ஸ்கூட்டர்களின் விலையை அடுத்த விற்பனையில் இருந்து அதிகரிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. அந்த வகையில் தற்போது வரை S1 Pro ஸ்கூட்டர்களின் விலை ரூ. 1,29,999 ஆகவும், Ola S1 ஸ்கூட்டர்களின் விலை ரூ.99,999 ஆகவும் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. இது குறித்த அறிவிப்பை ஓலா நிறுவனத்தின் CEO பவிஷ் அகர்வால் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார், என்றாலும் விலை உயர்வின் சரியான வரம்பு பற்றி எதுவும் அப்பதிவில் குறிப்பிடப்படவில்லை.

இது தொடர்பான ட்வீட்டில் ‘ஏற்கனவே S1 ப்ரோவை வாங்கிய அனைவருக்கும் நன்றி. மேலும் 2வது அல்லது 3வது S1 ப்ரோவை வாங்கியவர்களுக்கும் சிறப்பு நன்றி! ஓலா ஸ்கூட்டரை ரூ.129,999க்கு பெறுவதற்கான கடைசி வாய்ப்பு இது. அடுத்த சாளரத்தில் விலைகளை உயர்த்துவோம். இந்த சாளரம் மார்ச் 18 நள்ளிரவுடன் முடிவடைகிறது. இப்போதே வாங்கவும், ஓலா பயன்பாட்டில் மட்டும்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இப்போது ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் S1 மற்றும் S1 ப்ரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 1,000 யூனிட்களை உற்பத்தி செய்வது கவனிக்கத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!